தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2377

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பை தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்” எனக் கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனக்கும், “இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது” எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(திர்மிதி: 2377)

بَابٌ

حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكِنْدِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: أَخْبَرَنِي المَسْعُودِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ فَقَامَ وَقَدْ أَثَّرَ فِي جَنْبِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا لَكَ وِطَاءً، فَقَالَ: «مَا لِي وَلِلدُّنْيَا، مَا أَنَا فِي الدُّنْيَا إِلَّا كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا»

وَفِي البَاب عَنْ ابْنِ عُمَرَ، وَابْنِ عَبَّاسٍ
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2299.
Tirmidhi-Shamila-2377.
Tirmidhi-Alamiah-2299.
Tirmidhi-JawamiulKalim-2311.




إسناد حسن (الجوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21956-அல்மஸ்வூதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மகனின் பேரன்) கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவர் மூளைக்குழம்புவதற்கு முன் கூஃபாவிலும், பஸராவிலும் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் வழியாக வரும் செய்தி சரியானது என அபூநுஐம் அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/282)
  • பக்தாதில் இவரிடமிருந்து செவியேற்று அறிவிப்பவர்கள் வழியாக வரும் செய்திகள் பலவீனமானது. (நூல்: தக்ரீபுத் தஹ்தீபு 1/586)
  • இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-16426-ஸைத் பின் ஹுபாப் கூஃபாவாசி என்பதால் இது சரியான செய்தியாகும்…

இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மஸ்வூதீ —> அம்ர் —> இப்ராஹீம் —> அல்கமா —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க : அஹ்மத்-3709 , 4208 , இப்னு மாஜா-4109 , திர்மிதீ-2377 , ஹாகிம்-7859 , …

  • ஹபீப் —> அபூ அப்துர்ரஹ்மான் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10327 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.