தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3709

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

3709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுத்திருந்தார்கள். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்துவிட்டது. அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தபின், அவர்களின் மேனியை நான் தொட்டுப்பார்த்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் நாங்கள் தயாரித்துத் தருகிறோம். (அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்) எனக் கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது?. மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது’’ எனக் கூறி (அதை நிராகரித்து) விட்டார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

இப்னு மஸ்வூத் (ரலி)

عبد الله بن مسعود

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் பின் ஃகாஃபில் பின் ஹபீப் பின் ஷம்க் பின் ஃபார் பின் மக்ஸூம் பின் ஸாஹிலா பின் காஹில் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: மஸ்வூத் பின் ஃகாஃபில்

வம்சம்: அல்ஹுதல், பனூ ஸுஹ்ரா கூட்டாளியாவார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, அபிசீனியா, மதீனா, கூஃபா

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவராகவும், அவர்களின் பயணங்களில் உடன் செல்பவராகவும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் குணநலன்களில் மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டார்கள்.

குர்ஆனை மிகச் சிறப்பாக ஓதக்கூடியவராகவும், அதன் விளக்கங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார்கள். ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), ஸஃத் பின் முஆத், உமர் பின் கத்தாப் (ரலி), ஸஃப்வான் பின் அஸ்ஸால்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ், அபூ உபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அப்துல்லாஹ் பின் உத்பா, அபூ ஸயீத் அல்குத்ரீ, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அல்கமா பின் கைஸ், அல்அஸ்வத் பின் யஸீத், மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அபூ அப்துர்ரஹ்மான், இப்னு உம்மி அப்த்


ஆதாரம்: muslimscholars.info (16) · Should verify


حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

اضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ، فَأَثَّرَ فِي جَنْبِهِ، فَلَمَّا اسْتَيْقَظَ، جَعَلْتُ أَمْسَحُ جَنْبَهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا آذَنْتَنَا حَتَّى نَبْسُطَ لَكَ عَلَى الْحَصِيرِ شَيْئًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «مَا لِي وَلِلدُّنْيَا؟ مَا أَنَا وَالدُّنْيَا؟ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ الدُّنْيَا كَرَاكِبٍ ظَلَّ تَحْتَ شَجَرَةٍ، ثُمَّ رَاحَ وَتَرَكَهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-3525.
Musnad-Ahmad-Shamila-3709.
Musnad-Ahmad-Alamiah-3525.
Musnad-Ahmad-JawamiulKalim-3580.



إسناده حسن رجاله ثقات عدا عبد الرحمن بن عبد الله المسعودي وهو صدوق اختلط قبل موته وضابطه أن من سمع منه ببغداد فبعد الاختلاط ، رجاله رجال البخاري (الجوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்மஸ்வூதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் கொள்ளுப் பேரன்) கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவர் மூளைக்குழம்பிய பின் தான் இவரிடமிருந்து ராவீ யஸீத் பின் ஹாரூன் செவியேற்றுள்ளார். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/282)
  • என்றாலும் அல்மஸ்வூதீ அவர்கள் மூளைக்குழம்புவதற்கு முன் அவரிடமிருந்து செவியேற்றவர்களும் இந்த செய்தியை அறிவித்துள்ளனர் என்பதால் இது சரியான செய்தியாகும்…

மேலும் பார்க்க: திர்மிதீ-2377 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.