தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5225

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

காலை முத்தமிடுதல்.

5225 . … (அப்துல் கைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) நாங்கள் மதீனா வந்து எங்கள் வாகனத்திலிருந்து இறங்கியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளையும் கால்களையும் முத்தமிடலானோம்….

அறிவிப்பவர் : ஸாரிவு (ரலி)

(அபூதாவூத்: 5225)

بَابٌ فِي قُبْلَةِ الرِّجْلِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنُ الطَّبَّاعِ، حَدَّثَنَا مَطَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْنَقُ، حَدَّثَتْنِي أُمُّ أَبَانَ بِنْتُ الْوَازِعِ بْنِ زَارِعٍ، عَنْ جِدِّهَا، زَارِعٍ وَكَانَ فِي وَفْدِ عَبْدِ الْقَيْسِ قَالَ

لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا، فَنُقَبِّلُ يَدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَهُ، قَالَ: وَانْتَظَرَ الْمُنْذِرُ الْأَشَجُّ حَتَّى أَتَى عَيْبَتَهُ فَلَبِسَ ثَوْبَيْهِ، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: «إِنَّ فِيكَ خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ، الْحِلْمُ وَالْأَنَاةُ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَا أَتَخَلَّقُ بِهِمَا أَمُ اللَّهُ جَبَلَنِي عَلَيْهِمَا؟ قَالَ: «بَلِ اللَّهُ جَبَلَكَ عَلَيْهِمَا» قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَبَلَنِي عَلَى خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ وَرَسُولُهُ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4548.
Abu-Dawood-Shamila-5225.
Abu-Dawood-Alamiah-4548.
Abu-Dawood-JawamiulKalim-4550.




  • இந்த செய்தியை சில அறிஞர்கள் சரியான ஹதீஸ் என்று கூறி இருந்தாலும் தக்க காரணமில்லாமல் தான் அவ்வாறு கூறுகிறார்கள்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

  • ஸாரிவு என்ற நபித்தோழர் கூறியதாக இதை அறிவிப்பவர், அவரது பேத்தி உம்மு அபான் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இவரது நம்பகத் தன்மைக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் இவரது அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ள முடியும்.
  • இந்த ஹதீஸ் சரியானது என்று கூறுபவர்கள் உம்மு அபான் என்ற பெண்ணின் நாணயம், நேர்மை, நினைவாற்றல் குறித்த நற்சான்றுகளை எடுத்துக் காட்டி அப்படிக் கூற வேண்டும். இவரது நாணயம், நேர்மை பற்றி ஒரு அறிஞரும் நற்சான்று கொடுக்கவில்லை. ஒரு அறிஞருக்கும் இவரைப் பற்றி தெரியவில்லை.

أم أبان بنت الوازع عن جدها زارع، تفرد عنها مطر الأعنق.

1 . இவர் வழியாக ம(த்)தர் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று தஹபி கூறுகிறார். அதாவது ஒரே ஒருவர் தான் இவரைப் பற்றி அறிந்திருக்கிறார் என்று தஹபி கூறுகிறார்.

رواه الطبراني وأم أبان لم يرو عنها غير مطر

2 . உம்மு அபான் வழியாக ம(த்)தர் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று மஜ்மவுஸ் ஸவாயித் நூலில் ஹைஸமீ கூறுகிறார். ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அறிவித்து வேறு எந்த அறிஞரும் ஒருவரைப் பற்றி நற்சான்று அளிக்காவிட்டால் அவர் யாரென அறியப்படாதவர் ஆவார். அதாவது பலவீனமானவராவார். இது பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தமது நுக்பா எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

النوع (40): فإن سمى الراوي وانفرد راو واحد بالرواية عنه فهو مجهول العين

ஒரு அறிவிப்பாளர் தனக்கு முந்தைய அறிவிப்பாளரின் பெயரைக் கூறுகிறார். அவர் மட்டுமே அந்த அறிவிப்பாளரிடமிருந்து அறிவித்து இருந்தால் அந்த அறிவிப்பாளர் யாரென அறியப்படாதவர் ஆவார்.

  • இந்தக் காரணத்தால் உம்மு அபான் மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர் – ஆவார். எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் தமது தக்ரீப் நூலில் இவர் மக்பூல் – ஒப்புக் கொள்ளப்பட்டவர் என்று கூறியதை ஆதாரமாகக் காட்டி இது சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுகின்றனர். மக்பூல் என்ற சொல்லுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டவர் என்று அகராதியில் பொருள் இருந்தாலும் இப்னு ஹஜரின் வழக்கத்தில் இதன் பொருள் அதுவல்ல.
  • அறிவிப்பாளர்களைப் பன்னிரண்டு தரமுடையவர்களாக பிரித்திருப்பதாகக் கூறும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் அதன் விளக்கத்தையும் தக்ரீப் நூலின் முன்னுரையில் கூறுகிறார்.

மக்பூல் என்பதை ஆறாவது தரமாகக் குறிப்பிடுகிறார்.

ஐந்தாவது தரமாக அவர் கூறுவதைப் பாருங்கள்.

الخامسة: من قصر عن الرابعة قليلاً، وإليه الإشارة بصدوق سيء الحفظ، أو صدوق يهم، أو له أوهام، أو يخطئ، أو تغير بأخرة ويلتحق بذلك من رمي بنوع من البدعة، كالتشيع والقدر، والنصب، والإرجاء، والتجهم، مع بيان الداعية من غيره.

உண்மையாளர் ஆனால் நினைவாற்றல் குறைந்தவர் என்றோ, உண்மையாளர் என்றாலும் தவறாகவும் கூறுவார் என்றோ, அல்லது தவறு செய்பவர் என்றோ, இறுதிக் காலத்தில் மூளை குழம்பியவர் என்றோ நான் குறிப்பிடுபவர்கள் ஐந்தாவது தரத்தில் உள்ளவர்களாவர் எனக் கூறுகிறார்.

இவர்களை விட தாழ்ந்த தரத்தில் உள்ள ஆறாவது தரத்தில் உள்ளவர்களைத் தான் மக்பூல் என்று தான் சொல்வதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறுகிறார்.

மக்பூல் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறும் விளக்கத்தைப் பாருங்கள்!

السادسة: من ليس له من الحديث إلا القليل، ولم يثبت فيه ما يترك حديثه من أجله، وإليه الإشارة بلفظ: مقبول، حيث يتابع، وإلا فلين الحديث.

ஒருவர் குறைவான ஹதீஸ் அறிவித்து, அவரைக் காரணம் காட்டி ஒரு ஹதீஸ் பலவீனம் என்று சொல்லப்படவில்லையானால் அவர் தான் மக்பூல் என்கிறார்.

நான்காம் படித்தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் இடம் பெறும் ஹதீஸ்களை பலவீனம் என்று சொல்பவர்கள் அதைவிட தரத்தில் குறைந்த ஐந்தாம் நிலையில் உள்ளவர் இடம் பெற்ற ஹதீஸை சரியானது என்று கூறியிருப்பது வியப்பாக உள்ளது.

மேலும் மக்பூல் தரத்தில் உள்ளவர்கள் அறிவித்த செய்தி போன்று மற்றவர்கள் அறிவித்தால் தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது ஹதீஸ்கலை விதியாகும். இந்த செய்தி உம்மு அபான் வழியாக மட்டும் தான் வந்துள்ளது. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

ஆனால் இந்த ஹதீஸின் இறுதியில் வரும் முன்திர் அஷஜ் அவர்கள் பற்றிய சம்பவம் வேறு சரியான ஹதீஸ்களில் வந்துள்ளது. பார்க்க அஹ்மத்-11175 .

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-24436 , அபூதாவூத்-5225 , அல்முஃஜமுல் கபீர்-5313 , 5314 , அல்முஃஜமுல் அவ்ஸத்-418 , குப்ரா பைஹகீ-13587 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2733 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.