2733 . இந்த நபியிடம் என்னை அழைத்துச் செல் என்று ஒரு யூதர் தனது தோழரிடம் கூறினார். அவரை நபி என்று சொல்லாதே! அவரது காதில் விழுந்தால் அவருக்கு நான்கு கண்கள் ஏற்பட்டு விடும் (அதாவது கர்வம் ஏற்பட்டு விடும்) என்று அந்தத் தோழர் கூறினார். பின்னர் இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தெளிவான ஒன்பது அத்தாட்சிகள் யாவை என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! திருடாதீர்கள்! விபச்சாரம் செய்யாதீர்கள்!
தக்க காரணமில்லாமல் கொலை செய்வதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளதால் கொலை செய்யாதீர்கள்! குற்றம் செய்யாதவனைக் கொலை செய்வதற்காக மன்னரிடம் பிடித்துக் கொடுக்காதீர்கள்! சூனியம் செய்யாதீர்கள்! வட்டியை உண்ணாதீர்கள்! ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லாதீர்கள்! போர்க்களத்தில் பின்வாங்காதீர்கள்! யூதர்களே குறிப்பாக நீங்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்! என்று கூறினார்கள்!
உடனே அவர்கள் நபிகள் நாயகத்தின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டனர். நீங்கள் நபி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். அப்படியானால் என்னைப் பின்பற்ற உங்களுக்கு என்ன தடை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தாவூத் நபியவர்கள் தனது வழித்தோன்றலில் ஒரு நபி இருந்து கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளனர். எனவே உங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டால் யூதர்கள் எங்களைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறோம் என்றனர்.
அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
(திர்மிதி: 2733)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ، قَالَ
قَالَ يَهُودِيٌّ لِصَاحِبِهِ: اذْهَبْ بِنَا إِلَى هَذَا النَّبِيِّ فَقَالَ صَاحِبُهُ: لَا تَقُلْ نَبِيٌّ، إِنَّهُ لَوْ سَمِعَكَ كَانَ لَهُ أَرْبَعَةُ أَعْيُنٍ، فَأَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَاهُ عَنْ تِسْعِ آيَاتٍ بَيِّنَاتٍ. فَقَالَ لَهُمْ: «لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا، وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَلَا تَمْشُوا بِبَرِيءٍ إِلَى ذِي سُلْطَانٍ لِيَقْتُلَهُ، وَلَا تَسْحَرُوا، وَلَا تَأْكُلُوا الرِّبَا، وَلَا تَقْذِفُوا مُحْصَنَةً، وَلَا تُوَلُّوا الفِرَارَ يَوْمَ الزَّحْفِ، وَعَلَيْكُمْ خَاصَّةً اليَهُودَ أَنْ لَا تَعْتَدُوا فِي السَّبْتِ»، قَالَ: فَقَبَّلُوا يَدَيْهِ وَرِجْلَيْهِ. فَقَالَا: نَشْهَدُ أَنَّكَ نَبِيٌّ. قَالَ: «فَمَا يَمْنَعُكُمْ أَنْ تَتَّبِعُونِي»؟ قَالُوا: إِنَّ دَاوُدَ دَعَا رَبَّهُ أَنْ لَا يَزَالَ مِنْ ذُرِّيَّتِهِ نَبِيٌّ، وَإِنَّا نَخَافُ إِنْ تَبِعْنَاكَ أَنْ تَقْتُلَنَا اليَهُودُ
وَفِي البَابِ عَنْ يَزِيدَ بْنِ الأَسْوَدِ، وَابْنِ عُمَرَ، وَكَعْبِ بْنِ مَالِكٍ
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2657.
Tirmidhi-Shamila-2733.
Tirmidhi-Alamiah-2657.
Tirmidhi-JawamiulKalim-2676.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24637-அப்துல்லாஹ் பின் ஸலிமா அல்ஹமதானி என்பவர் பற்றி ஷுஃபா அவர்கள், இவர் வயதான போது தான் இவரிடமிருந்து அம்ர் பின் முர்ரா அறிவித்தார் என்று கூறியுள்ளார். (நூல்: அல்முன்தகா-104)
- இவர் அறிவிப்பவற்றில் ஏற்கத் தக்கவையும் நிராகரிக்கத் தக்கவையும் உள்ளன என்று அபூ ஹாத்திம் கூறியுள்ளார். ( (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/347 ). எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இதைப் பதிவு செய்த திர்மிதீ அவர்கள் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார். ஆனால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் இதன் கருத்து சரியாக இல்லை என்பதால் முன்கர் (இதைவிட வலுவான ஆதாரத்துக்கு எதிரானது) என்று கூறியுள்ளார். அறிவிப்பாளரில் குறை உள்ளதால் இது பலவீனமானது என்று முன்திரீ அவர்கள் கூறியுள்ளார். (நூல்: நஸபுர் ராயஹ் 4/257)
இதன் கருத்து எப்படி தவறானது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
- திருக்குர்ஆனில் 17:101 வசனத்தில் மூஸா நபிக்கு ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். இது யூத வேதங்களிலும் உள்ளது. இதைப் பற்றித் தான் அவர்கள் கேள்வி கேட்கின்றனர். மூஸா நபிக்கு கொடுத்த ஒன்பது அத்தாட்சிகள் என்பது மூஸா நபிக்கு கொடுத்த அற்புதங்கள் பற்றியதாகும். அவருக்கு வழங்கப்பட்ட கட்டளைகள் பற்றியதல்ல.
- தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்தபோது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
- ஒன்பது அத்தாட்சிகளை மூஸா நபிக்கு வழங்கியதாகக் கூறும் இறைவன் அதன் பொருளைப் பின்வரும் வசனத்தில் சொல்லித் தருகிறான்.
“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்” (என்று இறைவன் கூறினான்).
- ஒன்பது சான்றுகள் என்பது மூஸா நபிக்கு வழங்கப்பட்ட ஒன்பது அற்புதங்களையே குறிக்கிறது என்று இவ்வசனம் சொல்வதால் இதற்கு மாற்றமாக நபியவர்கள் பதிலளித்ததாகக் கூறுவது கட்டுக் கதையாகும். இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் காலில் விழுவதைத் தடை செய்யும் வலுவான ஆதாரங்களுக்கு முரணாக இந்தச் செய்தி அமைந்துள்ளதால் மேலும் இது பலவீனப்படுகிறது. பார்க்க: திர்மிதீ-1159 .
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-18092 , 18096 , இப்னு மாஜா-3705 , திர்மிதீ-2733 , 3144 , நஸாயீ-4078 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-5225 .
சமீப விமர்சனங்கள்