தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-19369

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19369 . அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

காகத்தை உண்பவர்களை (எண்ணி) நான் ஆச்சரியப்படுகிறேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமில் உள்ளவருக்கு அதைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கு “ஃபாஸிக்“ தீங்கிழைக்கக்கூடியது என்று பெயரிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது ”தூய்மையானவைகளில்” உள்ளது அல்ல.

(பைஹகீ-குப்ரா: 19369)

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أنبأ عَبْدِ اللهِ بْنُ جَعْفَرِ بْنِ دَرَسْتَوَيْهِ الْفَارِسِيُّ، ثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ الْفَارِسِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ

إِنِّي لَأَعْجَبُ مِمَّنْ يَأْكُلُ الْغُرَابَ وَقَدْ أَذِنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَتَلِهِ لِلْمُحْرِمِ وَسَمَّاهُ فَاسِقًا , وَاللهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-19153.
Kubra-Bayhaqi-Shamila-19369.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17825.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24945-அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உவைஸ் பற்றி நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு அப்தில் பர் போன்றோர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவரும் இவரின் மகன் இஸ்மாயீல் அவர்களும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/366)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3248 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.