(காகத்தை உண்பவர்கள் பற்றி) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
காகத்தை யார் சாப்பிடுவது?. நபி (ஸல்) அவர்கள் அதற்கு “ஃபாஸிக்” (தீங்கிழைக்கக்கூடியது) என்று பெயரிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது (உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட) தூய்மையானவைகளில் உள்ளதல்ல.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
(இப்னுமாஜா: 3248)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
مَنْ يَأْكُلُ الْغُرَابَ؟ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَاسِقًا، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3248.
Ibn-Majah-Shamila-3248.
Ibn-Majah-Alamiah-3239.
Ibn-Majah-JawamiulKalim-3247.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அஸ்ஹர்
3 . ஹைஸம் பின் ஜமீல்
4 . ஷரீக் பின் அப்துல்லாஹ் அல்காழீ
5 . ஹிஷாம் பின் உர்வா
6 . உர்வா பின் ஸுபைர்
7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
இந்தக் கருத்தில், இந்த வகை அறிவிப்பாளர்தொடர்களில் வரும் செய்திகளில் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களின் வழியாக முர்ஸலாக வரும் செய்தியே உண்மையாகும்.
காரணம் ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமுஆவியா, ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஜஃபர் பின் அவ்ன், அனஸ் பின் இயாள் ஆகிய 4 பேர், ஹிஷாம் பின் உர்வா —> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரைக் குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
(பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19877)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 174)
3062- وسئل عن حديث عروة، عن ابن عمر، قال: من يأكل الغراب، وقد سماه النبي صلى الله عليه وسلم فاسقا؟.
فَقَالَ: يَرْوِيهِ هِشَامُ بْنُ عُرْوَةَ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فرواه الهيثم بن جميل، عن شريك، عن هشام، عن أبيه، عن ابن عمر.
وخالفه أبو أويس، فَرَوَاهُ عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ.
وكلاهما غير ثابت.
1 . இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஷரீக் பின் அப்துல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஹைஸம் பின் ஜமீல் அவர்கள், ஷரீக் பின் அப்துல்லாஹ் —> ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
2 . ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஉவைஸ் அவர்கள், ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
3 . இவ்வாறே ஷரீக் பின் அப்துல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஹனீஃபா பின் மர்ஸூக் அவர்கள், ஷரீக் பின் அப்துல்லாஹ் —> ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் —> அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
4 . இவற்றில், ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
—> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற முர்ஸலான அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-537, 3062)
இந்தச் செய்திகளில் இடம்பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ், அபூஉவைஸ் ஆகியோர் நினைவாற்றல் சரியில்லாதவர்கள் என்பதால் தான் அவர்களின் செய்திகளை விட முர்ஸலாக அறிவிப்பவர்களின் செய்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் இந்தச் செய்தியின் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தரத்தை அடையும்.
(பார்க்க: புகாரி-1829, இப்னு மாஜா-3249)
இப்னு மாஜாவின் ஸவாஇத் செய்திகளைத் தொகுத்துள்ள பூஸிரீ அவர்களும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் மேற்கண்ட இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-3248, அல்ஃபவாஇத்-அபூபக்ர் ஷாஃபிஈ-1022, அல்அப்தாலுல் அவாலீ-முஹம்மத் பின் அப்பாஸ்-28, குப்ரா பைஹகீ-19368, தல்கீஸுல் முதஷாபிஹ்-1093,
- அல்ஃபவாஇத்-அபூபக்ர் ஷாஃபிஈ-1022.
الفوائد الشهير بالغيلانيات لأبي بكر الشافعي (2/ 743)
1022 – حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ بُرْدٍ الْأَنْطَاكِيُّ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، ثنا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «مَنْ يَأْكُلُ الْغُرَابَ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسِقًا وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ»
…
- அல்அப்தாலுல் அவாலீ-முஹம்மத் பின் அப்பாஸ்-28.
الأبدال العوالي المستخرجة من فوائد أبي بكر الشافعي انتقاء ابن تيمية – مخطوط (ص: 29)
الْحَدِيثُ الثَّامِنُ وَالْعِشْرُونَ (28) -[28] ………. حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: ” مَنْ يَأْكُلُ الْغُرَابَ، وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسِقًا، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ “.ق عَنِ الأَزْهَرِ عَنِ الْهَيْثَمِ
இந்தச் செய்தி அல்ஃபவாஇத்-அபூபக்ர் ஷாஃபிஈ-1022 இல் உள்ள செய்தியாகும்.
- தல்கீஸுல் முதஷாபிஹ்-1093.
تلخيص المتشابه في الرسم (2/ 731)
1093 – أَنَا أَبُو مُحَمَّدٍ الْحَسَنُ بْنُ عَلِيٍّ السَّابُورِيُّ، نا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَحْمَوَيْهِ الْعَسْكَرِيُّ، نا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ بُرْدٍ الأَنْطَاكِيُّ، نا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، نا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: «مَنْ يَأْكُلُ الْغُرَابَ، وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسِقًا؟ وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ»
…
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-19369.
3 . அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-14842.
4 . உர்வா பின் ஸுபைர் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19877.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1829,
1 . பார்க்க: பல்லியைச் சாப்பிடலாமா?.
2 . பார்க்க: எலிக்கறியைச் சாப்பிடலாமா?.
சமீப விமர்சனங்கள்