தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3249

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்பு, தேள், எலி, (நீர்க்)காகம் ஆகியவை தீங்கிழைப்பவையாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


(அப்துர்ரஹ்மான் பின் காஸிம் (ரஹ்) கூறுகிறார்:)

(எனது தந்தை) காஸிம் பின் முஹம்மது பின் அபூபக்ர் (ரஹ்) அவர்களிடம், “காகத்தை சாப்பிடலாமா?” எனக் கேட்கப்பட்ட போது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபாஸிக்” என்று கூறிய பிறகு அதை யார் சாப்பிடுவார்?“ என்று கூறினார்.

(இப்னுமாஜா: 3249)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«الْحَيَّةُ فَاسِقَةٌ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ، وَالْغُرَابُ فَاسِقٌ»

فَقِيلَ لِلْقَاسِمِ: أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ: «مَنْ يَأْكُلُهُ؟ بَعْدَ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسِقًا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3249.
Ibn-Majah-Shamila-3249.
Ibn-Majah-Alamiah-3240.
Ibn-Majah-JawamiulKalim-3248.




  • இந்தச் செய்தியின் முதல் பகுதி நபியின் சொல்லாகும். இரண்டாவது பகுதி தாபிஈ-நபித்தோழரை அடுத்து வந்தவர், நபியின் சொல்லிலிருந்து புரிந்துக் கொண்ட கருத்தாகும்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்

3 . முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ

4 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ்-அல்மஸ்ஊதீ

5 . அப்துர்ரஹ்மான் பின் காஸிம்

6 . காஸிம் பின் முஹம்மத்

7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21956-அல்மஸ்ஊதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மகனின் பேரன்) பலமானவர் தான் என்றாலும் கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னு அம்மார் ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவரிடமிருந்து பஃக்தாதைச் சேர்ந்தவர்கள் அறிவிப்பது இவர் மூளைக் குழம்பிய பின் என்பதால் அவை பலவீனமானவை என்றும், இவர் மூளைக் குழம்புவதற்கு முன் கூஃபாவிலும், பஸராவிலும் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூநுஐம் போன்ற பலர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/523, அல்கவாகிபுன் நய்யிராத்-1/282)

இதில் மஸ்ஊதீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ அவர்கள் பஃக்தாதிலும் வாழ்ந்துள்ளார். பஸராவிலும் வாழ்ந்துள்ளார். இவர் மரணித்தது பஸராவில் ஆகும். இவர் எப்போது இந்தச் செய்தியை மஸ்ஊதீ அவர்களிடமிருந்து கேட்டிருப்பார் என்று நமக்கு தெரியாவிட்டாலும் மஸ்ஊதீ அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர்களான அப்துல்லாஹ் பின் முபாரக், ஃபள்ல் பின் துகைன் அல்முலாஈ ஆகியோரும் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

(பார்க்க: முஸ்னத் இப்னுல் முபாரக்-190, முஸ்னத் இஸ்ஹாக்-955)

مسند عبد الله بن المبارك ط-أخرى (ص: 117)
190 – أَخبَرَنا الْمَسْعُودِيُّ, قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ, عَنْ أَبِيهِ, عَنْ عَائِشَةَ, أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيه وسَلم, قَالَ: الْحَيَّةُ فَاسِقَةٌ, وَالْعَقْرَبُ فَاسِقَةٌ, وَالْفَأْرَةُ فَاسِقَةٌ, وَالْغُرَابُ فَاسِقٌ. قَالَ: فَقَالَ إِنْسَانٌ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: أَيُؤْكَلُ الْغُرَابُ؟ فَقَالَ: مَنْ يَأْكُلُهُ بَعْدَ قَوْلِ النَّبِيِّ صَلى الله عَلَيه وسَلم: فَاسِقٌ.


மேலும் இவரிடமிருந்து அறிவிக்கும் வகீஃ அவர்களும் இவர் மூளைக் குழம்புவதற்கு முன் செவியேற்றவர் ஆவார். இவர் முதல் பகுதியை அறிவித்துள்ளார். எனவே இது சரியான செய்தியாகும்.


مصباح الزجاجة في زوائد ابن ماجه (3/ 242):
(7111) هَذَا إِسْنَاد رِجَاله ثِقَات إِلَّا أَن المَسْعُودِيّ واسْمه عبد الرَّحْمَن بن عبد الله بن عتبَة بن عبد الله بن مَسْعُود اخْتَلَط بآخرة وَلم نعلم هَل روى الْأنْصَارِيّ عَن المَسْعُودِيّ قبل الِاخْتِلَاط أَو بعده فَيجب التَّوَقُّف فِي حَدِيثه وَاسم الْأنْصَارِيّ مُحَمَّد بن عبد الله بن الْمثنى
قلت لم ينْفَرد بِهِ الْأنْصَارِيّ عَن المَسْعُودِيّ فقد رَوَاهُ أَبُو بكر بن أبي شيبَة فِي مُسْنده ثَنَا الْفضل بن دُكَيْن ثَنَا المَسْعُودِيّ فَذكره وَالْفضل بن دُكَيْن سمع من المَسْعُودِيّ قبل الِاخْتِلَاط قَالَه أَحْمد بن حَنْبَل كَمَا أفردته فِي كتابي رفع الشَّك بِالْيَقِينِ فِي تَبْيِين حَال الْمُخْتَلطين

பூஸீரீ இமாம் அவர்கள், இதை மஸ்ஊதீ அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் துகைன் அறிவித்திருப்பதால் சரியானது என்று கூறியுள்ளார்…


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மஸ்ஊதீ —> அப்துர்ரஹ்மான் பின் காஸிம் —> காஸிம் பின் முஹம்மத் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) 

பார்க்க: முஸ்னத் இப்னுல் முபாரக்-190, முஸ்னத் இஸ்ஹாக்-955, அஹ்மத்-25753, 26012, இப்னு மாஜா-3249, குப்ரா பைஹகீ-19365,


  • முஸ்னத் இப்னுல் முபாரக்-190.

مسند عبد الله بن المبارك ط-أخرى (ص: 117)
190 – أَخبَرَنا الْمَسْعُودِيُّ, قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ, عَنْ أَبِيهِ, عَنْ عَائِشَةَ, أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيه وسَلم, قَالَ: الْحَيَّةُ فَاسِقَةٌ, وَالْعَقْرَبُ فَاسِقَةٌ, وَالْفَأْرَةُ فَاسِقَةٌ, وَالْغُرَابُ فَاسِقٌ. قَالَ: فَقَالَ إِنْسَانٌ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: أَيُؤْكَلُ الْغُرَابُ؟ فَقَالَ: مَنْ يَأْكُلُهُ بَعْدَ قَوْلِ النَّبِيِّ صَلى الله عَلَيه وسَلم: فَاسِقٌ.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1829, முஸ்லிம்-2253,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.