நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்பு, தேள், (நீர்க்)காகம், எலி ஆகியவை தீங்கிழைப்பவையாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 25753)
حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْحَيَّةُ فَاسِقَةٌ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ، وَالْغُرَابُ فَاسِقٌ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-25753.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-25181.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . வகீஃ பின் ஜர்ராஹ்
3 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ்-அல்மஸ்ஊதீ
4 . அப்துர்ரஹ்மான் பின் காஸிம்
5 . காஸிம் பின் முஹம்மத்
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அல்மஸ்ஊதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மகனின் பேரன்) பலமானவர் தான் என்றாலும் கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு அம்மார் ஆகியோர் கூறியுள்ளனர். - இவரிடமிருந்து பஃக்தாதைச் சேர்ந்தவர்கள் அறிவிப்பது இவர் மூளைக் குழம்பிய பின் என்பதால் அவை பலவீனமானவை என்றும், இவர் மூளைக் குழம்புவதற்கு முன் கூஃபாவிலும், பஸராவிலும் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூநுஐம் போன்ற பலர் கூறியுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/523, அல்கவாகிபுன் நய்யிராத்-1/282)
இவரிடமிருந்து அறிவிக்கும் வகீஃ அவர்கள் இவர் மூளைக் குழம்புவதற்கு முன் செவியேற்றவர் ஆவார். மேலும் வகீஃ அவர்கள் கூஃபாவாசி ஆவார் என்பதால் இது சரியான செய்தியாகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3249.
சமீப விமர்சனங்கள்