பாடம் : 17 அடிமையைக் கேவலமாகக் கருதுவதும் என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூறுவதும் வெறுப்புக்குரியதாகும்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்…. (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை…. (16.75)
அவ்வேளை வாயிலில் அவளுடைய எஜமான் (கணவன்) நிற்பதை இருவரும் கண்டார்கள். (12.25)
உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறை நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில்… (4,25)
மேலும், நபி (ஸல்) அவர்கள் உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: உன் எஜமானிடம் (ரப்பிடம்) என்னைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்று (யூசுஃப் ) கூறினார். (12:42) மேலும் நபி(ஸல்) அவர்கள், உங்கள் தலைவர் யார்? என்று கேட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வணங்கி வருவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 49
بَابُ كَرَاهِيَةِ التَّطَاوُلِ عَلَى الرَّقِيقِ، وَقَوْلِهِ: عَبْدِي أَوْ أَمَتِي
وَقَالَ اللَّهُ تَعَالَى: {وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ} [النور: 32]، وَقَالَ: {عَبْدًا مَمْلُوكًا} [النحل: 75]، {وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى البَابِ} [يوسف: 25]، وَقَالَ: {مِنْ فَتَيَاتِكُمُ المُؤْمِنَاتِ} [النساء: 25] وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا إِلَى سَيِّدِكُمْ» وَ {اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ} [يوسف: 42] عِنْدَ سَيِّدِكَ، وَمَنْ سَيِّدُكُمْ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا نَصَحَ العَبْدُ سَيِّدَهُ، وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ»
சமீப விமர்சனங்கள்