அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்கள் பாவம் புரிந்து, பிறகு (பூமியில் இறக்கப்பட்ட போது) “ எனது இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்” எனக் கூறினார். அதற்கு அல்லாஹ், “முஹம்மது யார் என எப்படி உனக்குத் தெரியும்?. அவரை இன்னும் நான் படைக்கவில்லையே!” என்று கூறினான்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “நீ என்னை உனது கையால் படைத்து, எனக்குள் உயிரை ஊதிய போது எனது தலையை உயர்த்தி உனது அர்ஷின் தூண்களைப் பார்த்தேன். அதில், லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. எனவே உன்னுடைய பெயரோடு யாரை நீ சேர்த்திருந்தாயோ அவர் மற்றவர்களை விட உனக்கு மிகவும் பிரியமானவர் என நான் அறிந்து கொண்டேன்” எனக் கூறினார்.
அதற்கு அல்லாஹ், “ஆதமே! நீ சரியாகத் தான் கூறினாய். படைப்பினங்களில் அவரே எனக்கு மிகவும் பிரியமானவர். எனவே அவரின் பொருட்டால் என்னிடம் பிரார்த்தனை செய்வீராக! உனக்கு மன்னிப்பு வழங்குகிறேன். முஹம்மத் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்” என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இது அறிவிப்பாளர்தொடர் சரியாக உள்ள செய்தியாகும்.
மேலும் நான் இந்த நூலில் கூறும் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவரின் செய்திகளில் இது முதல் செய்தியாகும்.
(ஹாகிம்: 4228)حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ الْعَدْلُ، ثنا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، ثنا أَبُو الْحَارِثِ عَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمٍ الْفِهْرِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ مَسْلَمَةَ، أَنْبَأَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَمَّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ قَالَ: يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ لَمَا غَفَرْتَ لِي، فَقَالَ اللَّهُ: يَا آدَمُ، وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ؟ قَالَ: يَا رَبِّ، لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَىَ قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ، فَقَالَ اللَّهُ: صَدَقْتَ يَا آدَمُ، إِنَّهُ لَأُحِبُّ الْخَلْقِ إِلَيَّ ادْعُنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ
«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَهُوَ أَوَّلُ حَدِيثٍ ذَكَرْتُهُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ فِي هَذَا الْكِتَابِ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4228.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-4159.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . அம்ர் பின் முஹம்மத்
3 . முஹம்மத் பின் இஸ்ஹாக்
4 . அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்ஃபிஹ்ரீ
5 . இஸ்மாயீல் பின் மஸ்லமா
6 . அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம்
7 . ஸைத் பின் அஸ்லம்
8 . அஸ்லம் அல்அதவீ
9 . உமர் பின் கத்தாப் (ரலி)
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25997-அபுல்ஹாரிஸ்-அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்ஃபிஹ்ரீ என்பவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்.
ميزان الاعتدال (2/ 504):
4604 – عبد الله بن مسلم، أبو الحارث الفهري.
روى عن إسماعيل بن مسلمة ابن قعنب، عن عبد الرحمن بن يزيد بن سلم خبرا باطلا فيه: يا آدم لولا محمد ما خلقتك.
رواه البيهقى في دلائل النبوة.
- ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் அவர்களின் நூலை ஆய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் அவர்கள், இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். மேலும் இவரைப் பற்றிய குறிப்பில் இவரும் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ருஷைத் என்பவரும் ஒருவரே என்று குறிப்பிட்டு இவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: மீஸானுல் இஃதிதால்-2/503, 504, லிஸானுல் மீஸான்-5/11)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ-21745-அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவரைப் பற்றி ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் அவர்களே, தனது அல்மத்கலு இலஸ்ஸஹீஹ் எனும் நூலில் விமர்சித்துள்ளார்.
المدخل إلى الصحيح – ط الرسالة (ص154):
97 – عبد الرَّحْمَن بن زيد بن أسلم روى عَن أَبِيه أَحَادِيث مَوْضُوعَة لَا يخفى على من تأملها من أهل الصَّنْعَة أَن الْحمل فِيهَا عَلَيْهِ
அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் தனது தந்தையிடமிருந்து இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார். ஹதீஸ்கலை அறிஞர்களில் சிந்தித்து பார்க்கும் எவரும் இந்த தவறுக்கு இவர் தான் காரணம் என்று தெரிந்துக் கொள்வார்கள் என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: அல்மத்கலு இலஸ்ஸஹீஹ்-1/154)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6502 , அல்முஃஜமுஸ் ஸகீர்-992 , ஹாகிம்-4228 , பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-2251 ,
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-6502 , அல்முஃஜமுஸ் ஸகீர்-992 , ஹாகிம்-4228 , பைஹகீ – தலாஇலுன் நுபுவ்வஹ்-2251 ,
ஸஹீஹ் – பலமான செய்தி
அல்முஃஜமுல் அவ்ஸத்-6502 , மற்றவை பலவீனமானவை இதன் முழு தமிழாக்கம்
ஹாகிம்-4228 இதன் முழு தமிழாக்கம் தேவை
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்தும் பலவீனமானவை. வார்த்தை தவறுதலாக தரம் இடம்பெற்றுவிட்டது.