தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-4710

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் அடியான் தன்னுடைய வாலிபத்தை எதில் கழித்தான்? வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? ஆகிய நான்கு கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

(almujam-alawsat-4710: 4710)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُعَاوِيَةَ الْعُتْبِيُّ قَالَ: نَا زُهَيْرُ بْنُ عَبَّادٍ الرُّؤَاسِيُّ قَالَ: نَا عَبْدُ اللَّهِ بْنُ حَكِيمٍ أَبُو بَكْرٍ الدَّاهِرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الشَّامِيِّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَنْ يَزُولَ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَسْأَلَ عَنْ أَرْبَعٍ: عَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ، وَعَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ، وَفِيمَا أَنْفَقَهُ»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4710.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4850.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22433-அப்துர்ரஹ்மான் பின் முஆவியா அறியப்படாதவர்; ராவீ-24354-அப்துல்லாஹ் பின் ஹகீம் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்; ராவீ-39176-முஹம்மது பின் ஸயீத் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என விமர்சிக்கப்பட்டவர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-4/464)

முஹம்மது பின் ஸயீத் பற்றிய விமர்சனம்:

  • இவர் வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவர் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    கூறியுள்ளார்.
  • இவருடைய அறிவிப்பு கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டும் என புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    கூறியுள்ளார்.
  • இவர் ஹதீஸில் இட்டுக்கட்டும் பெரும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    கூறியுள்ளார்.
  • மற்றும் பல அறிஞர்கள் இவரை கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/572, தக்ரீபுத் தஹ்தீப்-1/847)

5 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4710 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2416 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.