நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாளில் மனிதனிடம், அவனுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? வாலிபத்தை எதில் கழித்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய கல்வியைக் கொண்டு என்ன அமல் செய்தான்? ஆகிய ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு (அவற்றிற்கு அவன் பதிலளிக்காத வரை) இறைவனை விட்டு அவனுடைய பாதங்கள் நகராது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது அரிதான செய்தி. இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக ஹுஸைன் பின் கைஸ் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ளார்.
மேற்கண்ட செய்தி அபூபர்ஸா (ரலி), அபூஸயீத் (ரலி) போன்றோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(திர்மிதி: 2416)حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالَ: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ أَبُو مِحْصَنٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ قَيْسٍ الرَّحَبِيُّ قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ القِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ، عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ، وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ، وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ حَدِيثِ الحُسَيْنِ بْنِ قَيْسٍ، وَحُسَيْنُ بْنُ قَيْسٍ يُضَعَّفُ فِي الحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ» وَفِي البَاب عَنْ أَبِي بَرْزَةَ، وَأَبِي سَعِيدٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2416.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2353.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13284-ஹுஸைன் பின் கைஸ் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதீ இமாம் அவர்களே இந்த செய்திக்கு கீழ் இதில் இடம்பெறும் ஹுஸைன் பின் கைஸ் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும், - அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஸாஜீ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் இவர் விடப்பட வேண்டியவர் என்றும், - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவருடைய செய்திகள் முன்கரானவை; இவரின் செய்தியை எழுதவும் கூடாது என்றும், - இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவரை பலவீனமானவர் என்றும் குறைகூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/434, தக்ரீபுத் தஹ்தீப்-1/249)
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அதாஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: திர்மிதீ-2416 , முஸ்னத் பஸ்ஸார்-1435 , முஸ்னத் அபீ யஃலா-5271 , அல்முஃஜமுல் கபீர்-9772 , அல்முஃஜமுஸ் ஸகீர்-760 ,
- அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7576 ,
2 . அபூபர்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2417 .
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11177 .
4 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரிமீ-556 .
5 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்சத்-4710 .
…
சமீப விமர்சனங்கள்