மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? ஆகிய நான்கு கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது என்று முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅப்துல்லாஹ் (ரஹ்)
(ஸுனன் தாரிமீ: 556)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ سُفْيَانَ، عَنْ لَيْثٍ، عَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ: عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلَاهُ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ، وَفِيمَا وَضَعَهُ، وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-556.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-540.
إسناد ضعيف فيه الليث بن أبي سليم القرشي وهو ضعيف الحديث (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
- இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் ஹதீஸில் குழம்பி அறிவிப்பவர் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹம்பல் கூறியுள்ளார். இவருடைய செய்தியை எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஆதாரமாக கொள்ள முடியாது என இப்னுஅதீ கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)
4 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அதீ பின் அதீ —> அபூஅப்துல்லாஹ் —> முஆத் பின் ஜபல் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34694 , தாரிமீ-556 , முஸ்னத் பஸ்ஸார்-2640 , 2641 , அல்முஃஜமுல் கபீர்-111/2 ,
- யஹ்யா பின் ராஷித் —> ஒரு மனிதர் —> முஆத் பின் ஜபல் (ரலி)
பார்க்க: தாரிமீ-555 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2416 .
சமீப விமர்சனங்கள்