பாடம்:
பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக செய்யப்படும் நல்லறங்கள்.
அபூஉஸைத்-மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நான் நன்மையைப் பெற்றுத் தரும் ஏதேனும் நல்லறங்கள் உள்ளதா? என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். அவை நான்கு காரியங்கள் ஆகும். அவைகள்:
1 . அவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்வது,
2 . அவர்கள் விட்டுச் சென்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,
3 . அவர்களுடைய நண்பர்களை கண்ணியப்படுத்துவது,
4 . உனக்கு அவர்கள் வழியாகவே மட்டுமே உறவினர்களாக ஆனவர்களை இணைத்து வாழ்வது”
என்று கூறினார்கள்.
باب برّ الوالدين بعد موتهما
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ، قَالَ: أَخْبَرَنِي أُسَيْدُ بْنُ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا أُسَيْدٍ
يُحَدِّثُ الْقَوْمَ، قَالَ: ” كُنَّا عِنْدَ النَّبِيِّ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا؟، قَالَ: نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ: الدُّعَاءُ لَهُمَا، وَالاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لا رَحِمَ لَكَ إِلا مِنْ قِبَلِهِمَا “
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-35.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-35.
ضعيف الإسناد؛ علي بن عبيد و أسيد بن علي بن عبيد مجهول
இந்த ஹதீஸில் இடம் பெறும் அலீ இப்னு உபைத் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்…
1 . இந்தக் கருத்தில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.பின் ரபீஆ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்- 16059, அல்அதபுல் முஃப்ரத்-35, இப்னு மாஜா- 3664, அபூதாவூத்- 5142, இப்னு ஹிப்பான்- 418, அல்முஃஜமுல் கபீர்- 592, அல்முஃஜமுல் அவ்ஸத்- 7976, ஹாகிம்- 418, குப்ரா பைஹகீ-, …
அஸ்ஸலாமு அலைக்கும்.
பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக செய்யப்படும் நல்லறங்கள் பற்றிய இந்த ஹதீஸின் இதே வாசகங்கள் அடங்கிய மற்ற அறிவிப்புகள் இப்னுமாஜா 3664, அபூதாவூத் 5142, அஹ்மத் 15533 – ஆகிய இந்த அறிவிப்புகளில் உள்ளதாக ஒரு கட்டுரையில் பார்த்தேன்.
அவற்றை இந்த தளத்தில் தேடினால் கிடைக்கவில்லை. இப்படி எந்த ஹதீசுமே இல்லையா? இதுபற்றிய விபரங்களை தயவுசெய்து சொல்ல முடியுமா?
வ அலைக்கும் ஸலாம்.
இந்தக் கருத்தில் வந்துள்ள சில செய்திகளின் எண்களை இணைத்துள்ளோம். அனைத்து நூல்களிலும் உஸைத் பின் அலீ, அலீ பின் உபைத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களிடமிருந்து ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் சிலர் இவர்கள் அறியப்படாதவர்கள் என்று முடிவு செய்து இதை பலவீனமானது என்று கூறுகின்றனர்.
வேறு சிலர் இவர்களை ஹஸன் தரத்தில் சேர்க்கின்றனர். இதைப் பற்றிய தகவலை இன்ஷா அல்லாஹ் பிறகு நாம் பதிவு செய்வோம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
யாரென்றே அறியப்படாதவர் இடம்பெற்றிருந்தும் அந்த அறிவிப்புகளை ஹஸன் தரத்தில் சேர்ப்பதற்கு காரணம் என்ன என்பதையும் உங்களின் தகவலோடு பதிவு செய்யுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
அறியப்படாதவர் என்பதை எப்படி முடிவு செய்வது என்பதில் உள்ள கருத்துவேறுபாடே இதற்கு காரணம், அறியப்படாதவர், ஹஸன் தர செய்திகள் பற்றி ஹதீஸ்கலை பகுதியில் உள்ள கட்டுரைகளில் இது விரிவாக கூறப்பட்டுள்ளது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
இதைப் பற்றிய கூடுதலான தகவல்களை நீங்கள் பதிவு செய்யும்வரை காத்திருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்