தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2634

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக் கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். ‘இது யாருடைய நிலம்?’ என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், ‘இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்’ என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், ‘இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாடகை அவர் பெற்றுக் கொள்வதை விட குத்தகைக்கு எடுத்தவருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி) மனீஹாவாக (இரவலாக) கொடுத்து விட்டிருந்தால் அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்’ என்று கூறினார்கள்.
Book :51

(புகாரி: 2634)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، قَالَ: حَدَّثَنِي – أَعْلَمُهُمْ بِذَاكَ يَعْنِي – ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى أَرْضٍ تَهْتَزُّ زَرْعًا، فَقَالَ: «لِمَنْ هَذِهِ؟»، فَقَالُوا: اكْتَرَاهَا فُلاَنٌ، فَقَالَ: «أَمَا إِنَّهُ لَوْ مَنَحَهَا إِيَّاهُ كَانَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا أَجْرًا مَعْلُومًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.