பாடம்: 10
அம்ர் இப்னு தீனார் (ரஹ்) அறிவித்தார்.
நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், ‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள்விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்’ என்றேன்.
இதைக்கேட்ட தாவூஸ் (ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்:
அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், ‘நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, ‘உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்’ என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம்: 41
(புகாரி: 2330)بَابٌ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو
قُلْتُ لِطَاوُسٍ: لَوْ تَرَكْتَ المُخَابَرَةَ فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُ، قَالَ: أَيْ عَمْرُو إِنِّي أُعْطِيهِمْ وَأُغْنِيهِمْ وَإِنَّ أَعْلَمَهُمْ، أَخْبَرَنِي يَعْنِي ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْهَ عَنْهُ وَلَكِنْ، قَالَ: «أَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهِ خَرْجًا مَعْلُومًا»
Bukhari-Tamil-2330.
Bukhari-TamilMisc-2330.
Bukhari-Shamila-2330.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சட்ட சுருக்கம்:
விளைச்சலில் கிடைப்பவற்றில் சில பங்கு தரவேண்டும் என்ற ஒப்பந்தப்படி விளை நிலங்களை குத்தகைக்கு விடலாமா?
இந்த ஒப்பந்தப்படி விளை நிலங்களைக் குத்தகைக்கு விடும் நடைமுறை நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தபோதும், யூதர்களின் கைபர் பகுதி முஸ்லிம்களுக்கு கிடைத்தபோதும் இருந்துள்ளது. மேலும் இந்த நிலை முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் இருந்துள்ளது.
என்றாலும் முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதிப் பகுதியில், நபி (ஸல்) அவர்கள் இதைத் தடைச் செய்துள்ளார்கள் என்ற கருத்து ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால், “உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட அளவு விளைச்சலை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மேற்கண்ட செய்தியின் மூலம் தெரிகிறது.
இந்தக் கருத்தில் வந்துள்ள செய்திகளின் மூலம் தடை இல்லை என்று தெரியவருகிறது.
விளைநிலங்களை தங்கம் அல்லது வெள்ளியை வாடகையாகத் தரவேண்டும் என்ற அடிப்படையில் அதாவது இன்றைய நிலவரப்படி நிலத்துக்கு வாடகைப் பணம் தரவேண்டும் என்ற அடிப்படையில் குத்தகைக்கு விடுவது கூடும் என்ற விசயத்தில் கருத்துவேறுபாடு இல்லை.
(பார்க்க: புகாரி-2346)
- தடைப் பற்றிய செய்திகளைக் காண்க: முஸ்லிம்-3138 .
- குத்தகைக்கு விட அனுமதியுள்ளது என்ற கருத்தில் வரும் செய்திகள்:
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, புகாரி-2330, 2342, 2634, முஸ்லிம்-3149, 3150, 3151, 3152, இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …
…
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்