தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3138

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும் முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியில் ஆரம்பக் கட்டத்திலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் விளைநிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தார்கள். முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதி நாட்களில் “நபி (ஸல்) அவர்கள் (நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை) தடை செய்தார்கள்” என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்துவரும் செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் அது குறித்து வினவினார்கள். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள்.

இதையடுத்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை கைவிட்டார்கள். பின்னர் அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்கப்பட்டால் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்துள்ளார்கள் என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள்” என விடையளிப்பார்கள்.


– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் இஸ்மாயீல் இப்னு உலய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எனவே, அதன் பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டு விட்டார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம்: 21

(முஸ்லிம்: 3138)

وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ

أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي إِمَارَةِ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَصَدْرًا مِنْ خِلَافَةِ مُعَاوِيَةَ، حَتَّى بَلَغَهُ فِي آخِرِ خِلَافَةِ مُعَاوِيَةَ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، يُحَدِّثُ فِيهَا بِنَهْيٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ عَلَيْهِ، وَأَنَا مَعَهُ، فَسَأَلَهُ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ»، فَتَرَكَهَا ابْنُ عُمَرَ بَعْدُ، وَكَانَ إِذَا سُئِلَ عَنْهَا بَعْدُ قَالَ: زَعَمَ رَافِعُ بْنُ خَدِيجٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا

– وحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، ح وحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، كِلَاهُمَا عَنْ أَيُّوبَ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، وَزَادَ فِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ قَالَ: فَتَرَكَهَا ابْنُ عُمَرَ بَعْدَ ذَلِكَ، فَكَانَ لَا يُكْرِيهَا


Muslim-Tamil-3138.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1547.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-2889.




சட்ட சுருக்கம்:

விளை நிலங்களை குத்தகைக்கு விடலாமா?

மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளின் அடிப்படையில் சிலர் இதை நாஸிக் (பழைய சட்டத்தை மாற்றிய செய்தி) என்று முடிவு செய்து நிலங்களை குத்தகைக்கு விடக்கூடாது என்று கூறுகின்றனர்.

வேறு சிலர், இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தியின் மூலம், “குத்தகைக்கு விடும்போது உபகாரம் என்ற அடிப்படையில் எதையும் பெறாமல் இருப்பது நல்லது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது தெரிய வருகிறது என்பதால் இது கடுமையான தடை அல்ல என்று முடிவு செய்து, நிலங்களை குத்தகைக்கு விடலாம் என்று தீர்ப்பளிக்கின்றனர்.

(பார்க்க: புகாரி-2330)

மேலும், தடை பற்றி வரும் சில செய்திகள், குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்படும் சில நிபந்தனைகளினால், அல்லது சில பாதிப்புகளால் கூறப்பட்டதாக தெரிகிறது.

(பார்க்க: புகாரி-2327, 2722 …)


1 . இந்தக் கருத்தில் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

  • நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) —> ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, புகாரி-2286, 2344, முஸ்லிம்-3138, 3139, 3140, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


  • ஹன்ளலா பின் கைஸ் —> ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

பார்க்க: மாலிக்-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-2327, 2332, 2722, முஸ்லிம்-3144, 3145, 3146, இப்னு மாஜா-, அபூதாவூத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


  • ஸுஹ்ரீ —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) —> ராஃபிஉ அவர்களின் தந்தையின் இரு சகோதரர்கள் (ரலி)

பார்க்க: புகாரி-4012 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.