தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2342

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.

(ஹதீஸ் எண் 2339ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த நபிமொழியை, நான் தாஊஸ்(ரஹ்) அவர்களிடம் கூறிய பொழுது அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டுப் பயிரிடச் செய்வது அனுமதிக்கப்பட்டதேயாகும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் அதனை (நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத்) தடை செய்யவில்லை.

மாறாக, ‘ஒருவர் தம் சகோதரருக்குத் தன் நிலத்தை இலவசமாகப் பயிரிட்டு (அதன் விளைச்சல் முழுவதையும் எடுத்து)க் கொள்ளக் கொடுத்து விடுவது அதற்காக ஒரு குறிப்பிட்ட பங்கை (குத்தகைத் தொகையாகப்) பெற்றுக் கொள்வதை விடச் சிறந்தது’ என்றே கூறினார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book :41

(புகாரி: 2342)

حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو، قَالَ: ذَكَرْتُهُ لِطَاوُسٍ، فَقَالَ: يُزْرِعُ، قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَنْهَ عَنْهُ وَلَكِنْ قَالَ: «أَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ شَيْئًا مَعْلُومًا»





மேலும் பார்க்க: புகாரி-2330 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.