தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-90

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 அறிவுரை கூறும் போதும் கல்வி கற்றுக்கொடுக்கும் போதும் தமக்குப் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் சினம் கொள்ளுதல். 

 ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! இன்னார் (தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக் கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையைப் பெறவே முடிவதில்லை’ என்று கூறினார்.

(இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) அவர்கள் தங்களின் உரையில் அன்றைய தினம் கடுமையாகக் கோபப்பட்டது போல் கோப்பட்டதை நான் பார்த்தே இல்லை! (அவ்வுரையில்) ‘மக்களே! நீங்கள் நிச்சயமாகவே வெறுப்புக் கொள்ளும் படியே நடந்து கொள்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துபவர் அதை இலகுவாக்கட்டும். ஏனெனில், தொழவந்தவர்களில் நோயாளிகள், நலிவுற்றவர்கள், தேவைகளுடையவர்கள் இருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத்(ரலி) கூறினார்.
Book : 3

(புகாரி: 90)

بَابُ الْغَضَبِ فِي الْمَوْعِظَةِ وَالتَّعْلِيمِ  إِذَا رَأَى مَا يَكْرَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ

قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، لاَ أَكَادُ أُدْرِكُ الصَّلاَةَ مِمَّا يُطَوِّلُ بِنَا فُلاَنٌ، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْ يَوْمِئِذٍ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ مُنَفِّرُونَ، فَمَنْ صَلَّى بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ المَرِيضَ، وَالضَّعِيفَ، وَذَا الحَاجَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.