தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-91

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

91. ‘நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வழியில் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி (சட்டம்) கேட்டதற்கு, ‘அதனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றி, அந்தப் பொருளிருக்கும் பாத்திரத்தைப் பற்றி, பொருளுக்குப் போடப்பட்டிருக்கும் உறையைப் பற்றி (அதன் முழு விவரங்களை) நீர் அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டு காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்துவீராக! அதற்குப் பிறகு அதனை நீர் பயன்படுத்திக் கொள். அதன் உரிமையாளர் அதனைக் கேட்டு வந்தால் அதனை அவரிடம் ஒப்படைத்து விடு!’ என்று கூறினார்கள்.

‘அப்படியானால் வழி தவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றிய சட்டம் என்ன?’ என்று அவர் கேட்டார். உடனே தம் கன்னங்கள் இரண்டும் சிவந்து போகும் அளவு அல்லது அவர்களின் முகம் சிவந்து போகும் அளவுக்கு – கோபப்பட்டவர்களாக, ‘கால் குளம்புகளும் அதற்கான தண்ணீரும் அதனுடன் இருக்க அதனை நீர் ஏன் பிடிக்கப் போகிறீர்? அது நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும். மரங்களை மேய்ந்து கொள்ளும். எனவே, அதனை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும் வரை அதன் போக்கில்விட்டு விடுவீராக!’ என்று கூறினார்கள்.

‘அப்படியானால் வழி தவறி வந்து விடும் ஆட்டின் சட்டம் என்ன?’ என்று கேட்டார். ‘அது உமக்கே உரியது. அல்லது (அதனைப் பிடிக்கும்) உம்முடைய அந்த சகோதரருக்குரியது. (அவ்வாறு அதனைப் பிடிக்காவிட்டால்) அது ஓநாய்க்குச் சொந்தமாகி விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜைத் இப்னு காலிது அல் ஜுஹைனீ(ரலி) அறிவித்தார்.
Book :3


حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ الْمَدِينِيُّ ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ رَجُلٌ عَنِ اللُّقَطَةِ، فَقَالَ: «اعْرِفْ وِكَاءَهَا، أَوْ قَالَ وِعَاءَهَا، وَعِفَاصَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اسْتَمْتِعْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ» قَالَ: فَضَالَّةُ الإِبِلِ؟ فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ، أَوْ قَالَ احْمَرَّ وَجْهُهُ، فَقَالَ: «وَمَا لَكَ وَلَهَا، مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ المَاءَ وَتَرْعَى الشَّجَرَ، فَذَرْهَا حَتَّى يَلْقَاهَا رَبُّهَا» قَالَ: فَضَالَّةُ الغَنَمِ؟ قَالَ: «لَكَ، أَوْ لِأَخِيكَ، أَوْ لِلذِّئْبِ»


Bukhari-Tamil-91.
Bukhari-TamilMisc-91.
Bukhari-Shamila-91.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்ஜுஃபி

عبد الله بن محمد بن عقيل الهاشمي

அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் பற்றி பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இப்னு மயீன், நஸாயீ போன்றோர் இவர் பலவீனமானவர் என்றும்,

இப்னு ஸஃத் இவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்றும்,

அபூஹாதிம், இப்னு குஸைமா போன்றோர் இவர் ஹதீஸை நான் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும்,

இப்னு உயைனா அவர்கள் குறைஷியர்களில் நான்கு பேரின் ஹதீஸ்கள் கைவிடப்பட்டன. அவர்களில் இவரும் ஒருவர் என்றும், இன்னும் பல அறிஞர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.

அஹ்மத், இஸ்ஹாக், ஹுமைதி போன்றோர் இவரின் ஹதீஸை ஆதாரமாக எடுத்துள்ளனர் என புகாரி இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் புகாரி இமாம் அவர்கள் இவரைப் பற்றி முகாரிபுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள். (இதன் கருத்து பற்றி சிலர் இவர் மிக பலவீனமானவர் அல்ல. இவரின் ஹதீஸ் எழுதப்படும், தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், சிலர் இதன் கருத்து ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும் கூறியுள்ளனர்.)

(நூல்கள்: ...தஹ்தீபுத் தஹ்தீப்-2/424, ...)

எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை ஆகும்.


* [3592] عبد الله بن محمد بن عقيل بن أبي طالب الهاشمي أبو محمد المدني أمه زينب بنت علي صدوق في حديثه لين ويقال تغير بأخرة من الرابعة مات بعد الأربعين بخ د ت ق

قلت: صالح الحديث: قال ابن معين "لا يحتج بحديثه" وأحمد بن حنبل "منكر الحديث" ويعقوب بن شيبة "وابن عقيل صدوق وفي حديثه ضعف شديد جدا" وكان ابن عيينة "أربعة من قريش يترك حديثهم فذكره فيهم" وابن خزيمة "لا أحتج به لسوء حفظه" والعجلي "جائز الحديث" وابن عدي "يكتب حديثه" والخطيب "كان سيء الحفظ" (تهذيب التهذيب 6/ 14). وقال ابن عبد البر "هو أوثق من كل من تكلم فيه" وتعقبه ابن حجر في تهذيبه وقال "وهذا إفراط".

அப்துல்மலிக் பின் அம்ர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸுலைமான் பின் பிலால்-அல்குரைஷீ

ஸுலைமான் பின் பிலால்-அத்தய்மீ (ரஹ்) – Sulaiman bin Bilal al-Taymi

இறப்பு: ஹிஜ்ரி 177, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுலைமான் பின் பிலால் அத்தய்மீ

தந்தை பெயர்: பிலால்

வம்சம்: குரைஷீ, பனூ தய்ம் கோத்திரத்தின் மவ்லா

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அபூ அய்யூப்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 100 அளவில்

இறப்பு: ஹிஜ்ரி 177, மதீனா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுலைமான் பின் பிலால் ரஹ் அவர்கள் அபூ முஹம்மத் மற்றும் அபூ அய்யூப் என்ற குன்யாக்களைக் கொண்டவர். இவர் மதீனாவைச் சேர்ந்த அத்தய்மீ ஆவார். இவர் பலமானவர் என அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்.

மதீனாவில் முஃப்தியாகவும், வரி வசூலிப்பாளராகவும் பணியாற்றினார். ஹிஜ்ரி 177 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸைத் பின் அஸ்லம், அப்துல்லாஹ் பின் தீனார், ஸலாஹ் பின் கைஸான் அல்மதனீ, ஹுமைத் பின் அபூ ஹுமைத், ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர், ரபீஆ பின் யஸீத் அத்தமஷ்கீ, அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் மஃமர், அம்ர் பின் அபூ அம்ர், முஹம்மத் பின் அஜ்லான் அல்மதனீ, மூஸா பின் அனஸ் பின் மாலிக், மூஸா பின் உக்பா, ஹிஷாம் பின் உர்வா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ ஆமிர் அல்க்தீ, அப்துல்லாஹ் பின் முபாரக், மஃலா பின் மன்சூர் அர்ராஸீ, மன்சூர் பின் ஸல்மா பின் அப்துல் அஸீஸ், யஹ்யா பின் ஹஸ்ஸான், மர்வான் பின் முஹம்மத் பின் ஹஸ்ஸான், அப்துல்லாஹ் பின் வஹ்ப், பிஷ்ர் பின் உமர் அஸ்ஸஹ்ரானீ, காலித் பின் மக்லத் அல்கத்வானீ, யஹ்யா பின் யஹ்யா பின் புகைர், இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ், அபூ பக்ர் பின் அபூ உவைஸ்

வேறு பெயர்கள்: சல்மான் பின் பிலால், ஸுலைமான்


ஆதாரம்: muslimscholars.info (20160) · Should verify

ரபீஃ பின் அபூ அப்துர்ரஹ்மான்-அர்ரஃயீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஸீத் பின் அல்முனப்பயிஸ்-அல்மதினீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸைத் பின் காலித்-அல்ஜுஹ்னீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.