தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-5472

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

(almujam-alawsat-5472: 5472)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ قَالَ: ثَنَا أَبِي قَالَ: وَجَدْتُ فِي كِتَابِ أَبِي: حَدَّثَنَا مُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ يَزِيدَ بْنِ مُعَتِّبٍ مَوْلَى صَفِيَّةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَبَيْنَ يَدَيْهَا كَوْمٌ مِنْ نَوَى، فَسَأَلَهَا: «مَا هَذَا؟» فَقَالَتْ: أُسَبِّحُ بِهِ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ سَبَّحْتُ مُنْذُ قُمْتُ عَنْكِ أَكْثَرَ مِنْ كُلِّ شَيْءٍ سَبَّحْتِ» . فَقَالَتْ: كَيْفَ قُلْتَ؟ قَالَ: «قُلْتُ: سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ»

لَمْ يَرْوِ هَذِهِ الْأَحَادِيثَ عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ إِلَّا مُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، تَفَرَّدَ بِهَا: مُحَمَّدُ بْنُ أَبِي شَيْبَةَ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5472.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5618.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48947-யஸீத் பின் முஅத்திப்(யஸீத் பின் ஷுஐப் என்பவரின் நம்பகத்தன்மை பற்றி கூறப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-3554 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.