தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3554

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் அதைக் கற்றுக் கொடுங்கள் என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹீ என்று நீ சொல்” என கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இந்தச் செய்தியை ஹாஷிம் பின் ஸயீத் அல்கூஃபீ என்பவர் (மட்டுமே) ஸஃபிய்யா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். இந்த அறிவிப்பாளர்தொடர் அறியப்பட்டதல்ல.

இப்பொடப்பொருள் தொடர்பான செய்தி, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: அபூதாவூத்-1503)

(திர்மிதி: 3554)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: حَدَّثَنَا هَاشِمٌ وَهُوَ ابْنُ سَعِيدٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنِي كِنَانَةُ، مَوْلَى صَفِيَّةَ قَالَ: سَمِعْتُ صَفِيَّةَ، تَقُولُ:

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلَافِ نَوَاةٍ أُسَبِّحُ بِهَا، قَالَ: «لَقَدْ سَبَّحْتِ بِهَذِهِ، أَلَا أُعَلِّمُكِ بِأَكْثَرَ مِمَّا سَبَّحْتِ؟» فَقُلْتُ: بَلَى عَلِّمْنِي. فَقَالَ: ” قُولِي: سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ

هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ صَفِيَّةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ هَاشِمِ بْنِ سَعِيدٍ الكُوفِيِّ، وَلَيْسَ إِسْنَادُهُ بِمَعْرُوفٍ وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3477.
Tirmidhi-Shamila-3554.
Tirmidhi-Alamiah-3477.
Tirmidhi-JawamiulKalim-3506.




தஸ்பீஹ் செய்வதற்கு பேரீத்தம் பழக்கொட்டை, கற்கள், தஸ்பீஹ் மணி போன்றவற்றை பயன்படுத்தலாமா? என்பது பற்றிய தகவல்:


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்

3 . அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ்

4 . ஹாஷிம் பின் ஸயீத் அல்கூஃபீ

5 . கினானா-ஸஃபிய்யா (ரலி) அவர்களின் அடிமை

6 . ஸஃபிய்யா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46964-ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், லைஸ பிஷைஇன்-இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார். (இந்த வார்த்தையை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் குறைந்த ஹதீஸை அறிவித்தவர்களுக்கும் கூறுவார். பலவீனமானவர்களுக்கும் கூறுவார்.)
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரைப் பற்றி எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
  • அபூஸுர்ஆ அவர்கள், இவர் முஹம்மத் பின் ஸியாத் அவர்களிடமிருந்து இரண்டு முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/104, ஸுஆலாதுல் பர்தஈ-அபூஸுர்ஆ-2/418, தஹ்தீபுல் கமால்-30/128, அல்இக்மால்-12/119, அல்காஷிஃப்-4/418, தஹ்தீபுத் தஹ்தீப்-4/260, தக்ரீபுத் தஹ்தீப்-1/1016)

இவர் குறைந்த செய்திகளையே அறிவித்திருந்தும் சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்பதால் தான் இவரை பலவீனமானவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  • மேலும் இதில் வரும் ராவீ-34665-கினானா என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • அபுல்ஃபத்ஹ் அஸ்தீ என்பவர், இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (இவரே விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இவரின் கருத்து ஏற்கத்தக்கதல்ல. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் ஆதாரமின்றி கினானாவை பலவீனமானவர் என்று கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.)
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/169, அஸ்ஸிகாத்-5/339, தஹ்தீபுல் கமால்-24/230, அல்காஷிஃப்-4/70, தஹ்தீபுத் தஹ்தீப்-30/128, தக்ரீபுத் தஹ்தீப்-1/814)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹாஷிம் பின் ஸயீத் அல்கூஃபீ பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


…சிலர் இந்த செய்தியை தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். இது பலவீனமானது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது…


1 . இந்தக் கருத்தில் ஸஃபிய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹாஷிம் பின் ஸயீத் —> கினானா —> ஸஃபிய்யா (ரலி)

பார்க்க: திர்மிதீ-3554, முஸ்னத் அபீ யஃலா-7118, அல்முஃஜமுல் கபீர்-195, அல்முஃஜமுல் அவ்ஸத்-8504, ஹாகிம்-2008,


  • மன்ஸூர் பின் ஸாதான் —> யஸீத் பின் முஅத்திப் —> ஸஃபிய்யா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5472,


2 . ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1500.


3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு ஜுர்ஜான்-1/108,

تاريخ جرجان (ص: 108)
94 – أَبُو سعيد أَحْمَد بْن عراق بْن أحيد بْن إسحاق29/ألف الخوارزمي قدم جُرْجَان وحدث بها ومات بها فِي شهر ربيع الآخر سنة إحدى وأربعمائة ودفن فِي مقابر سُلَيْمَان اباذ.
أَخْبَرَنِي أَبُو سعيد أَحْمَد بْن عراق بْنِ أُحَيْدٍ حَدَّثَنَا أَبُو عَلِيٍّ شُعْبَةُ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْخَلِيلِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مِهْرَانَ الْحَافِظُ حَدَّثَنَا صَالِحُ بْنُ عَلِيٍّ النَّوْفَلِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ رَبِيعَةَ الْقُدَامِيُّ حَدَّثَنَا بن الْمُبَارَكِ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَبِّحُ بِالْحَصَى.


நபித்தோழர்களின் செயல்களாக வந்துள்ள செய்திகள்:

அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

உமர்

அலீ

ஸஃத் பின் அபூவக்காஸ்

இப்னு மஸ்ஊத்

அபூஸயீத்

ஆயிஷா

அபுத்தர்தா

அனைத்தும் பலவீனமானவை.


சிலர் கற்களை வைத்து தஸ்பீஹ் செய்ததை இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்கள் கண்டித்த நிகழ்வு:

பார்க்க: தாரிமீ-210.


இந்தக் கருத்துடன் தொடர்புடைய சரியான செய்தி:

பார்க்க: முஸ்லிம்-5272.


கைகளால் தான் தஸ்பீஹ் செய்ய வேண்டும்.

பார்க்க: திர்மிதீ-3410.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.