நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்…
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
(almujam-alawsat-8504: 8504)حَدَّثَنَا مُعَاذٌ قَالَ: نا شَاذُّ قَالَ: نا هَاشِمٌ، عَنْ كِنَايَةَ، عَنْ صَفِيَّةَ، قَالَتْ:
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلَافِ نَوَاةٍ أُسَبِّحُ بِهِنَّ، فَقَالَ: «يَا بِنْتَ حُيَيٍّ، مَا هَذَا؟» قُلْتُ: أُسَبِّحُ فِيهِ قَالَ: «قَدْ سَبَّحْتُ مُنْذُ قُمْتُ عَلَى رَأْسِكَ أَكْثَرَ مِنْ هَذَا» ، فَقُلْتُ: عَلِّمْنِي يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «قَوْلِي: سُبْحَانَ اللَّهَ عَدَدَ مَا خَلَقَ مِنْ شَيْءٍ»
لَمْ يَرْوِ هَذِهِ الْأَحَادِيثَ عَنْ كِنَانَةَ، عَنْ صَفِيَّةَ إِلَّا هَاشِمُ بْنُ سَعِيدٍ الْكُوفِيُّ، تَفَرَّدَ بِهَا: شَاذُّ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8504.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-8727.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஹாஷிம் பின் ஸயீத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/1016)
மேலும் பார்க்க: திர்மிதீ-3554 .
சமீப விமர்சனங்கள்