தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை, கம்பு ஆகிய ஐந்து தானியங்களில் மட்டுமே ஸகாத் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்…
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
(இப்னுமாஜா: 1815)حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:
إِنَّمَا سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فِي هَذِهِ الْخَمْسَةِ: فِي الْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالتَّمْرِ، وَالزَّبِيبِ، وَالذُّرَةِ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1805.
Ibn-Majah-Shamila-1815.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1805.
إسناد شديد الضعف فيه محمد بن عبيد الله العرزمي وهو متروك الحديث (جوامع الكلم)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40965-முஹம்மது பின் உபைதில்லாஹ் மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இவருடைய அறிவிப்புக்களை நன்மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று அஹ்மது பின் ஹம்பல் கூறியுள்ளார்.
- இவர் பயனற்றவர் என யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
- இவர் மிகவும் பலவீனமானவர் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ராஸி கூறியுள்ளார். - இவர் நம்பகமானவர் அல்ல என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
கூறியுள்ளார். - இவரது அறிவிப்புகள் சரியானவை இல்லை என ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/637 )
- மேற்கண்ட செய்தியின் கருத்தில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். இந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதால் விளைபொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் நெல்லுக்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
(என்றாலும் சிலர், இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகளை சரியானது என்றும் கூறியுள்ளனர்)
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1815 , தாரகுத்னீ-1905 ,
2 . முஆத் பின் ஜபல் (ரலி), அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-21989 .
சமீப விமர்சனங்கள்