தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21989

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

மூசா பின் தல்ஹா (ரஹ்) கூறுகிறார் :

தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வாங்கினார்கள் என எங்களிடம் உள்ள முஆத் (ரலி) அவர்களின் புத்தகத்தில் உள்ளது.

(முஸ்னது அஹ்மத்: 21989)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ يَعْنِي ابْنَ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ:

عِنْدَنَا كِتَابُ مُعَاذٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ إِنَّمَا أَخَذَ الصَّدَقَةَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20985.
Musnad-Ahmad-Shamila-21989.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21428.




  • இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இதன் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு அறுந்துள்ளது.
  • முஆத் (ரலி) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை அறிவிக்கும் மூசா பின் தல்ஹா என்பவர் முஆத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என இப்னு அப்துல் பர் கூறியுள்ளார்.
  • அபூ ஸுர்ஆ அவர்களும் இவ்வாறு கூறியுள்ளார்.
  • இதனால் இச்செய்தி தொடர்பு அறுந்தது என இமாம் தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வரும் எந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை என இமாம் திர்மிதீ கூறியுள்ளார்கள். எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

  • என்றாலும் வேறு சிலர், முஸா பின் தல்ஹா அவர்கள் முஆத் (ரலி) அவர்களை சந்திக்காவிட்டாலும் அவரின் நூலிலிருந்து அறிவிக்கும் செய்தி என்பதால் இதை ஆதாரமாக ஏற்கின்றனர்.

(ஆய்வுக்காக: حديث معاذ هذا في أصناف الزكاة)

….(நூல்: இர்வாஉல் கலீல்-801, அல்மதாலிபுல் ஆலியா-5/489-490.)

2 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல், அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7186 , 7187 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10022 , 10025 , அஹ்மத்-21989 , அல்முஃஜமுல் கபீர்-313 , தாரகுத்னீ-1914 , ஹாகிம்-14571459 , குப்ரா பைஹகீ-7451 , 7452 , 7453 , 7474 , 7475 , ஸுனன் ஸகீர்-பைஹகீ-1187 ,

மேலும் பார்க்க: இப்னு மாஜா-1815 . …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.