தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-17563

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

…நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி ஆகியோருக்கு ஏழாம் நாளில் கத்னா செய்தனர்…

(பைஹகீ-குப்ரா: 17563)

وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ، ثنا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ الْمَكِّيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ:

عَقَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ وَخَتَنَهُمَا لِسَبْعَةِ أَيَّامٍ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-17563.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-16140.




இந்த செய்தி பல காரணங்களால் பலவீனமானதாகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் زهير بن محمد التميمي ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து ஷாம் நாட்டை சார்ந்தவர்கள் அறிவிக்கும் செய்தி முன்கரானவை என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.இவரிடமிருந்து அறிவிக்கும் வலீத் பின் முஸ்லிம் ஷாம் நாட்டை சார்ந்தவர் என்பதால் இது பலவீனமான செய்தி.
  • மேலும் வலீத் பின் முஸ்லிம் தத்லீஸ் செய்பவர், இவர் عن அன்அனா மூலம் அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் கூறியுள்ளார்…
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் محمد بن المتوكل القرشي  முஹம்மது பின் முதவக்கில் அதிகம் தவறிழைப்பவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
  • மேலும் கத்னா செய்யும் வயது பற்றி வரும் சரியான செய்திக்கு இது முரணாக உள்ளது. அரபு மக்களிடம் பருவவயதை நெருங்கும் போது தான் கத்னா செய்யும் நடைமுறை இருந்துள்ளது… பார்க்க : புகாரி-6299

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.