நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது என் தாய் என்னை, வா நான் உனக்கு (ஒன்றைத்) தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீ (உன் மகனுக்கு எதையாவது) கொடுக்க எண்ணியுள்ளாயா? என்று கேட்டார்கள். நான் அவனுக்கு ஒரு பேரித்தம் பழத்தைக் கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறினார். நீ அவனுக்கு எதையும் கொடுக்கவில்லையானால் உன் மீது பொய் சொன்ன குற்றம் எழுதப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)
(அபூதாவூத்: 4991)حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، أَنَّ رَجُلًا، مِنْ مَوَالِي عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ الْعَدَوِيِّ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، أَنَّهُ قَالَ:
دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا، فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ؟» قَالَتْ: أُعْطِيهِ تَمْرًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4339.
Abu-Dawood-Shamila-4991.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4341.
இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் ஒரு மனிதர் என்று இடம்பெற்றுள்ளது. இவர் யார்? இவரின் நம்பத்தன்மை நிலை என்ன என்ற விவரம் தெரியாததால் இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
- எனினும் பொதுவாக பொய் சொல்லக்கூடாது என்ற நபிமொழி பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் தடை செய்துள்ளது. (பார்க்க: புகாரி-6094 )
- ஆனாலும் நன்மையை நாடி சொல்லப்படுபவை பொய்யாக ஆகாது என்ற பொதுவான அடிப்படை குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நம்மிடம் வசதி இல்லாதபோது விலை உயர்ந்த பொருளைக் காட்டி அதை குழந்தை வாங்கிக் கேட்கும்.வாங்கித் தராவிட்டால் அழுது அடம் பிடித்து அதன் காரணமாக குழந்தைக்கும் உடல் நலக் குறைவு கூட ஏற்படலாம்.
அப்போது குழந்தையின் அழுகையை நிறுத்துவதுதான் முக்கியமானது. நாளை வாங்கித் தருகிறேன் என்று கூறி அல்லது இதைவிட சிறந்ததை வாங்கித் தருகிறேன் எனக் கூறி அப்போது அழுகையை நிறுத்துவதுதான் குழ்ந்தைக்கு செய்யும் நன்மையாகும்.
வாங்கித் தரவே முடியாது என்று சொன்னால் குழந்தையின் அழுகை நிற்காது. தன்னிடம் வசதி இல்லை என்று பாடம் நடத்தினால் இந்தப் பொருளாதாரப் பாடம் அக்குழந்தைக்குப் புரியாது. குழந்தையின் நன்மையை நாடி இதுபோன்ற பொய்கள் சொல்வது குற்றமாகாது.
குழந்தை நிலையைக் கடந்து புரிந்துகொள்ளக் கூடிய நிலையை அடைந்தால் அப்போது பொய் சொல்லக் கூடாது. நிலவரத்தை விளக்கி நமது இயலாமையை அல்லது அப்பொருளின் தீமையைப் புரிய வைக்க வேண்டும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-15702 , அபூதாவூத்-4991 , குப்ரா பைஹகீ-20839 , 20840 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-4996 .
சமீப விமர்சனங்கள்