தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4996

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு பொருளை வாங்கினேன். அவர்களுக்கு மீதம் தரவேண்டியிருந்தது. எனவே நான், இந்த இடத்தில் இருங்கள் (மீதப் பணத்தைக் கொண்டு) வருகிறேன் என்று வாக்குறுதி வழங்கினேன். (ஆனால்) அதை மறந்துவிட்டேன். மூன்று நாட்களுக்குப் பின்னர் எனக்கு நினைவு வந்தது. அங்கே சென்ற போது அதே இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அப்போது, இளைஞனே எனக்கு கஷ்டத்தைத் தந்துவிட்டாயே? நான் மூன்று நாட்களே இதே இடத்தில் உன்னை எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ ஹம்சா (ரலி)

(அபூதாவூத்: 4996)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ بُدَيْلٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ، قَالَ:

بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ، فَنَسِيتُ، ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ، فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ، فَقَالَ: «يَا فَتًى، لَقَدْ شَقَقْتَ عَلَيَّ، أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ»

قَالَ أَبُو دَاوُدَ: قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى: «هَذَا عِنْدَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ» قَالَ أَبُو دَاوُدَ: هَكَذَا بَلَغَنِي عَنْ عَلِىِّ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَبُو دَاوُدَ: بَلَغَنِي أَنَّ بِشْرَ بْنَ السَّرِيِّ، رَوَاهُ عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4344.
Abu-Dawood-Shamila-4996.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4346.




  • இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக அப்துல் கரீம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை பற்றி குறிப்புகள் கிடையாது.

تقريب التهذيب ـ العاصمة (ص: 619)
عبد الكريم بن عبد الله بن شقيق العقيلي البصري مجهول من السادسة ( د- ابو داود )

அப்துல் கரீம் பின் அப்துல்லாஹ் பின் ஷகீக் என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல் : தக்ரீபுத் தஹ்தீப்.

  • மேலும் இதன் கருத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ஒருவர் நில்லுங்கள் வருகிறேன் என்று கூறினால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நிற்கலாம். மூன்று நாட்கள் நின்றால் நம்முடைய எத்தனையோ வேலைகள் பாதிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் உணவுக்கு என்ன செய்வது? எங்கு உறங்குவது? போன்ற கேள்விகள் இந்த செய்தி பலவீனமானதே என்பதை தெளிவுபடுத்துகிறது.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4996 , ஸுனன் குப்ரா பைஹகீ-20835 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4991 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.