ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
- மது பானத்தையும்
- அதைப் பருகுபவரையும்
- பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்
- அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும்
- (தானே) தயார் செய்து கொள்பவரையும்
- அதை விற்பவரையும்
- அதை வாங்குபவரையும்
- அதைச் சுமந்து செல்பவரையும்
- யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும்
- அதன் கிரயத்தை உண்பவரையும் (அல்லாஹ் சபிக்கிறான்.)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி).
(முஸ்னது அஹ்மத்: 5716)حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَائِلٍ الْأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَلَعَنَ شَارِبَهَا، وَسَاقِيَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ، وَآكِلَ ثَمَنِهَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5716.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5564.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸயீத் பின் அப்துர் ரஹ்மான் நினைவாற்றலில் பலவீனமானவர். இதே கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.
பார்க்க: அபூதாவூத்-3674 .
சமீப விமர்சனங்கள்