காரிஜா இப்னு ஸைத் அல் அன்சாரீ(ரஹ்) அறிவித்தார்.
உம்முல் அலா(ரலி) , எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவராக இருந்தார்கள்; நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள்.
அவர்கள் எனக்குத் தெரிவித்தாவது:
‘முஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்க வைப்பது’ என்று அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பங்காக வந்தது. எனவே, அவர்கள் எங்களிடம் தங்கினார்கள், அவருக்கு நோய் ஏற்பட்டபோது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் மரணித்துவிட்டபோது அவரை அவரின் துணிகளில் வைத்து (கஃபனிட்டு) விட்டோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.
(நான் உஸ்மான் இப்னு மழ்வூனை நோக்கி), ‘அபூ சாயிபே! அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தெரியாது?’ என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கு நன்மையையே விரும்புகிறேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் ‘அவரிடம் எப்படி நடந்து கொள்ளப்படும்; (மறுமையில் அவரின் நிலை என்னவாகும்?)’ என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் பாராட்டிக் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ‘அது அவரின் (நற்)செயல்’ என்று கூறினார்கள்.
Book :52
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي خَارِجَةُ بْنُ زَيْدٍ الأَنْصَارِيُّ، أَنَّ أُمَّ العَلاَءِ – امْرَأَةً مِنْ نِسَائِهِمْ – قَدْ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ
أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُ سَهْمُهُ فِي السُّكْنَى، حِينَ أَقْرَعَتْ الأَنْصَارُ سُكْنَى المُهَاجِرِينَ، قَالَتْ أُمُّ العَلاَءِ: فَسَكَنَ عِنْدَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَاشْتَكَى، فَمَرَّضْنَاهُ حَتَّى إِذَا تُوُفِّيَ وَجَعَلْنَاهُ فِي ثِيَابِهِ، دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ؟»، فَقُلْتُ: لاَ أَدْرِي بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا عُثْمَانُ فَقَدْ جَاءَهُ وَاللَّهِ اليَقِينُ، وَإِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِهِ»، قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا، وَأَحْزَنَنِي ذَلِكَ، قَالَتْ: فَنِمْتُ، فَأُرِيتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «ذَاكِ عَمَلُهُ»
சமீப விமர்சனங்கள்