இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. மேலும், உனது வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு.
ஏனெனில் (நீ அவ்வாறு செலவிடாவிட்டால்) உன் மனைவி , நீ எனக்கு செலவிடு, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு’ என்று கூறிவிடுவாள். உன் அடிமை, நீ எனக்கு செலவிடு முடியாவிட்டால் என்னை விற்றுவிடு எனக் கூறுவான், உன் பிள்ளை (உங்களைவிட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு?’ என்று கூறும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(al-adabul-mufrad-196: 196)حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
خَيْرُ الصَّدَقَةِ مَا بَقَّى غِنًى، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، تَقُولُ امْرَأَتُكَ: أَنْفِقْ عَلَيَّ أَوْ طَلِّقْنِي، وَيَقُولُ مَمْلُوكُكَ: أَنْفِقْ عَلَيَّ أَوْ بِعْنِي، وَيَقُولُ وَلَدُكَ: إِلَى مَنْ تَكِلُنَا
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-196.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-189.
மேற்கண்ட செய்தியின் இரண்டாவது பகுதி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் கூற்று என்பதை புகாரி-5355 எண்ணில் பார்க்கலாம்.
- இதில் வரும் ஆஸிம் பின் பஹ்தலஹ் (ஆஸிம் பின் அபின் நஜூத்) நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
وقال الدارقطني : في حفظه شيء
تهذيب الكمال: (13 / 473)
- இந்த கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன. பார்க்க : புகாரி-1427, 1428, 5355 முஸ்லிம்-1884
சமீப விமர்சனங்கள்