தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5355

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர் ஆகியோருக்குச் செலவு செய்வது கடமையாகும்.6

 அபூ ஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) கூறினார்

நபி (ஸல்) அவர்கள் ‘(ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதத்தை) தன்னிறைவான நிலையில் செய்யும் தர்மமே சிறந்ததர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான், தாழ்ந்துள்ள (வாங்கும்) கையை விடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு!’ என்று கூறினார்கள்7 என அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு,

‘(கணவனிடம்) மனைவி, ‘எனக்கு உணவளி, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு’ என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), ‘எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக் கொள்!’ என்று கூறுகிறான். மகன் (தன் தந்தையிடம்), ‘எனக்கு உணவளியுங்கள். (உங்களைவிட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு?’ என்று கூறுகிறான்’ எனக் கூறினார்கள். மக்கள், ‘அபூ ஹுரைரா(ரலி) அவர்களே! இதையுமா நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘இல்லை; இது அபூ ஹுரைராவின் (என்னுடைய) கூற்றாகும்’ என்று கூறினார்கள்.

Book : 69

(புகாரி: 5355)

بَابُ وُجُوبِ النَّفَقَةِ عَلَى الأَهْلِ وَالعِيَالِ

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَفْضَلُ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنًى، وَاليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ» تَقُولُ المَرْأَةُ: إِمَّا أَنْ تُطْعِمَنِي، وَإِمَّا أَنْ تُطَلِّقَنِي، وَيَقُولُ العَبْدُ: أَطْعِمْنِي وَاسْتَعْمِلْنِي، وَيَقُولُ الِابْنُ: أَطْعِمْنِي، إِلَى مَنْ تَدَعُنِي “، فَقَالُوا: يَا أَبَا هُرَيْرَةَ، سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «لاَ، هَذَا مِنْ كِيسِ أَبِي هُرَيْرَةَ»


Bukhari-Tamil-5355.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5355.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக
வரும் செய்திகள்:

  • அபூஸாலிஹ் (தக்வான்) —> அபூஹுரைரா(ரலி)

பார்க்க: அஹ்மத்-7429 , 10172 , 10223 , 10785 , 10818 , புகாரி-5355 , அபூதாவூத்-1676 , இப்னு குஸைமா-2436 , இப்னு ஹிப்பான்-3363 , தாரகுத்னீ-3780 , 3781 , 3784

ஸஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா(ரலி)

..இப்னு குஸைமா-2439 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.