நான் ஹீரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உங்களுக்கு சிரம் பணியலாமா என்று கேட்டேன்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவ்வாறு செய்யக் கூடாது) , ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்’ ஏனெனில் (அந்தளவிற்கு) அல்லாஹ் கணவனுக்கு செய்யவேண்டிய கடமையை அவள் மீது விதித்துள்ளான் என்று கூறினார்கள்…
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
(ஸுனன் தாரிமீ: 1504)بَابُ النَّهْيِ أَنْ يَسْجُدَ لِأَحَدٍ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، عَنْ شَرِيكٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ قَالَ:
أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانَ لَهُمْ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَسْجُدُ لَكَ؟ قَالَ: «لَوْ أَمَرْتُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ، لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ، لِمَا جَعَلَ اللَّهُ عَلَيْهِنَّ مِنْ حَقِّهِمْ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1504.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1435.
[حكم الألباني] : صحيح دون جملة القبر
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் شريك بن عبد الله بن الحارث ஷரீக் பின் அப்துல்லாஹ் நினைவாற்றல் குறையுள்ளவர்.
- தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் தனித்து அறிவித்தால் அது பலமானது அல்ல என்று கூறியுள்ளனர்.
صدوق يخطئ كثيرا , تغير حفظه منذ ولي القضاء بالكوفة ، وكان عادلا فاضلا عابدا شديدا على أهل البدع
تقريب التهذيب: (1 / 436)
சிலர் ஷரீக் , ஹுஸைனிடம் செவியேற்றது மூளை குழம்புவதற்கு முன் என்பதால் இந்த செய்தியை ஹஸன் என்று கூறுகிறார்கள்…
மேலும் பார்க்க: அபூதாவூத்-2140 .
சமீப விமர்சனங்கள்