தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11248

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் அதில் தங்குவோருக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11248)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا خَالِدُ بْنُ يَزِيدَ الْعُمَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدٍ اللَّيْثِيُّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يُنْزِلُ اللهُ كُلَّ يَوْمٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ سِتُّونَ مِنْهَا للطَّوَّافينَ، وَأَرْبَعُونَ للعاكفينَ حَوْلَ الْبَيْتِ، وَعِشْرُونَ مِنْهَا لِلنَّاظِرِينَ إِلَى الْبَيْتِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11248.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11092.




إسناد فيه متهمان بالوضع وهما خالد بن يزيد العمري وهو كذاب ذاهب الحديث ، ومحمد بن عبد الله الليثي وهو متهم بالكذب والوضع

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14691-காலித் பின் யஸீத் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என விமர்சித்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்-2910)
  • மேலும் ராவீ-40496-முஹம்மது பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்-6966)
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். (நூல்: அள்ளயீஃபா-256)

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் அப்துல்லாஹ் —> இப்னு உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11248 ,

  • அதாஉ பின் அபூரபாஹ் —>  இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11475 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6314 , அக்பாரு அஸ்பஹான்-116664 , ஷுஅபுல் ஈமான்-3760 , …

  • அத்தப்ஸிரா லிஇப்னில் ஜவ்ஸீ-ஆய்வில்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.