தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1003

A- A+


ஹதீஸின் தரம்: More Info

நபி (ஸல்) அவர்கள் (முதல்) ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின், ‘ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)

(ஹாகிம்: 1003)

أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْقَاضِي، ثنا نَصْرُ بْنُ عَلِيٍّ، ثنا يَحْيَى بْنُ عَلِيٍّ، ثنا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُمَرَ بْنِ مُرَّةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَزِيدَ، عَنْ حُذَيْفَةَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ: «رَبِّ اغْفِرْ لِي»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1003.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-941.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தல்ஹா பின் யஸீத், ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்கவில்லை. இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார். எனவே இது தொடர்பறுந்த செய்தி.

هذا الحديث عندي مرسل ، وطلحة بن يزيد لا أعلمه سمع من حذيفة شيئا ، وغير العلاء بن المسيب قال في هذا الحديث : عن طلحة ، عن رجل عن حذيفة
سنن النسائي: (1 / 355)

வேறு அறிவிப்பாளர்தொடரில் விடுபட்ட அறிவிப்பாளர் கூறப்பட்டுள்ளது…

  • மேலும் இதில் வரும் ஒரு அறிவிப்பாளர் உமர் பின் முர்ரஹ் என்று கூறப்பட்டாலும் வேறு பிரதிகளில் அம்ர் பின் முர்ரஹ் என்று உள்ளது. இவர் பலமான அறிவிப்பாளர்.இதுவே சரியானது.

மேலும் பார்க்க : …

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.