ஹதீஸின் தரம்: விபரம் கீழே
2054. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண் சுவர்க்கத்தின் வாடையை நுகரமாட்டாள். ஆனால் சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பது ஆண்டுகள் பயண தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ ثَوْبَانَ، عَنْ عَمِّهِ عُمَارَةَ بْنِ ثَوْبَانَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَا تَسْأَلُ الْمَرْأَةُ زَوْجَهَا الطَّلَاقَ فِي غَيْرِ كُنْهِهِ فَتَجِدَ رِيحَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2054.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2044.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عمارة بن ثوبان உமாரா பின் ஸவ்பான், جعفر بن يحيى الحجازي ஜஃபர் பின் யஹ்யா அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-22440 .
சமீப விமர்சனங்கள்