அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22440)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ قَالَ: وَذَكَرَ أَبَا أَسْمَاءَ، وَذَكَرَ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21404.
Musnad-Ahmad-Shamila-22440.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21851.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-19259 , அஹ்மத்-22440 , தாரிமி-2316 , இப்னுமாஜா-2055 , அபூதாவூத்-2226 , இப்னு ஹிப்பன்-4184 , ஹாகிம்-2809 , ஸுனன்குப்ரா பைஹகீ-14860 ,
- பலவீனமான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள செய்திகள்:
(பார்க்க: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-11892 , 11893 , முஸன்னஃப் இப்னு அபீஷைபா-19258 , அஹ்மத்-22379 , 9358 , இப்னுமாஜா-2054 , திர்மிதீ-1186 , 1187 , நஸாயீ-3461 , முஃஜமுல் அவ்ஸத்-5469 )
- ஒரு பெண் தன் கணவரை விட்டுப் பிரிவதற்காக விவாகரத்து கோருகிறாள் என்றால் அதற்குக் காரணம் இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம். தகுந்த காரணத்துடன் விவாகரத்து கோரியிருந்தால் அவள் மீது குற்றமில்லை. காரணம் இல்லாமல் விவாகரத்து கோரியிருந்தால் அவள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகி விடுகின்றாள்.
- அந்தக் காரணத்தை அவள் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ காணப்படவில்லை.
- தகுந்த காரணமின்றி விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கக் கூடாது’ என்று சொல்லாமல் ‘சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது’என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே, அவள் அந்தக் காரணத்தை வெளியில் சொல்லத் தேவையில்லை என்பதை விளங்கலாம்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: நஸாயீ-3461 ,
சமீப விமர்சனங்கள்