அபூஉபைத் ஸுலைமான் பின் அப்துல் மலிக் கூறியதாவது:
மஸ்ஜிதுல் ஹராமில் உள்ள ஒரு பெரியவர் சொல்ல கேட்டேன்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பம் உண்டு. தொழுகையின் ஆரம்பம் முதல் தக்பீராகும். எனவே (ஜமாஅத்துடன் தொழும்போது) அதை (தவறவிடாமல்) பேணிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுத்தர்தா (ரலி) அறிவித்தார்.
(shuabul-iman-2648: 2648)
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الْمُقْرِئُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا حَمَّادٌ أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي أَبُو فَرْوَةَ، حَدَّثَنِي أَبُو عُبَيْدٍ، حَاجِبُ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ قَالَ: سَمِعْتُ شَيْخًا، فِي الْمَسْجِدِ الْحَرَامِ يَقُولُ: قَالَ أَبُو الدَّرْدَاءِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّ لِكُلِّ شَيْءٍ أُنْفَةً وَإِنَّ أُنْفَةَ الصَّلَاةِ التَّكْبِيرَةُ الْأُولَى، فَحَافِظُوا عَلَيْهَا
قَالَ أَبُو عُبَيْدٍ: فَحَدَّثْتُ بِه رَجَاءَ بْنَ حَيْوَةَ فَقَالَ: حَدَّثَتْنِيهِ أُمُّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2648.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2661.
إسناد ضعيف فيه يزيد بن سنان التميمي وهو ضعيف الحديث
- மேலும், அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் கூறப்படவில்லை. எனவே அவர் அறியப்படாதவர் என்பதாலும் இது பலவீனமான செய்தி.
- அபூஉபைத் இந்த செய்தியை ரஜா பின் ஹய்வா வழியாக அபுத்தர்தா (ரலி) வரை அறிவிப்பாளர் தொடர் கூறியுள்ளார்.
- ஆனால் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் يزيد بن سنان التميمي யஸீத் பின் ஸினான் அபூ ஃபர்வா பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான செய்தி.
மேலும் பார்க்க : திர்மிதீ-241 .
சமீப விமர்சனங்கள்