தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-5196

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆண்கள் தமது மனைவியை அடிப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் தனது மனைவியை அடிக்க, இரவில் உரத்த சத்தங்களை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

இது பற்றி நபித்தோழர்களிடம் கேட்கும் போது, அவர்கள் நீங்கள் ஆண்களுக்கு தமது மனைவிகளை அடிக்க அனுமதி கொடுத்தீர்கள், (அவர்கள் அடித்துவிட்டனர்.அதன் விளைவே இது) என்று கூறினர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(bazzar-5196: 5196)

وحَدَّثنا عَمْرو بن علي، قَال: حَدَّثنا أَبُو عَاصِم، قَال: حَدَّثنا جَعْفَرُ بْنُ يَحْيَى بْنِ ثَوبان، عَن عَمِّهِ عُمَارَةَ بْنِ ثَوبان، عَن عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِي اللَّهُ عَنْهُمَا،

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم أَذِنَ فِي ضَرْبِ النِّسَاءِ فَسَمِعَ مِنَ اللَّيْلِ صَوْتًا عَالِيًا فَقَالَ: إِنِّي لأَسْمَعُ صَوْتًا عَالِيًا قَالُوا: يَا رَسولَ اللهِ أَذِنْتَ فِي ضَرْبِ النِّسَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ، وَأنا خَيْرُكُمْ لأَهْلِي

وَهَذِهِ الأَحَادِيثُ لا نَعْلَمُهَا تُرْوَى، عَنِ ابْنِ عَبَّاسٍ إلاَّ بِهَذَا الإِسْنَادِ وَجَعْفَرُ بْنُ يَحْيَى وَعَمُّهُ مِنْ أَهْلِ مكة مستورون.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-5196.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-982.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عمارة بن ثوبان உமாரா பின் ஸவ்பான்جعفر بن يحيى الحجازي ஜஃபர் பின் யஹ்யா அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்த ஹதீஸ் வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அதில் ஆண்கள் தமது மனைவிகளை அடித்த சம்பவம் கூறப்படவில்லை.

மேலும் பார்க்க : இப்னு மாஜா-1977 .

சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3895 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.