தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18402

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நுஐம் பின் ஸியாத் (ரஹ்) கூறியதாவது:

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியில் (ஒரு பள்ளிவாயிலின்) உரைமேடையில் நின்று கூறினார்கள்:

நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.

மேலும் நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறினார்கள்:

நாங்கள் சஹர் நேரத்தை ஃபலாஹ் என்று கூறுவோம். நாங்கள் (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) 27 ம் இரவை 7 ம் இரவு என்றும் கூறுவோம். ஆனால் நீங்களோ 23 ம் இரவை (மாத கடைசியிலிருந்து கணக்கிட்டு) 7 ம் இரவு என்று கூறுகின்றீர்கள். எனவே இதில் நாங்கள் சரியாக சொல்கிறோமா, அல்லது நீங்களா?

(முஸ்னது அஹ்மத்: 18402)

حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي نُعَيْمُ بْنُ زِيَادٍ أَبُو طَلْحَةَ الْأَنْمَارِيُّ،

أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ عَلَى مِنْبَرِ حِمْصَ: ” قُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ فِي شَهْرِ رَمَضَانَ إِلَى ثُلُثِ اللَّيْلِ الْأَوَّلِ، ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ خَمْسٍ وَعِشْرِينَ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ قَامَ بِنَا لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ حَتَّى ظَنَنَّا أَنْ لَا نُدْرِكَ الْفَلَاحَ، قَالَ: وَكُنَّا نَدْعُو السُّحُورَ الْفَلَاحَ ” فَأَمَّا نَحْنُ فَنَقُولُ: لَيْلَةُ السَّابِعَةِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ، وَأَنْتُمْ تَقُولُونَ: لَيْلَةُ ثَلَاثٍ وَعِشْرِينَ السَّابِعَةُ، فَمَنْ أَصَوْبُ نَحْنُ، أَوْ أَنْتُمْ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20450.
Musnad-Ahmad-Shamila-18402.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18027.




2 . இந்தக் கருத்தில் நுஃமான் பின் பஷீர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-7696 , அஹ்மத்-18402 , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-1301 , நஸாயீ-1606 , இப்னு குஸைமா-2204 , ஹாகிம்-1608 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-1375 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.