நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இருபத்தி நான்காம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.
இருபத்தி ஐந்தாம் நாள் பாதி இரவை தாண்டும் வரை தொழுகை நடத்தினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினேன்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதால் அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.
இருபத்தி ஆறாம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி ஏழாம் நாள் இரவில் தமது மனைவிகளையும், குடும்பத்தினைரையும், மற்ற மக்களையும் ஒன்று திரட்டி, சஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதற்கு பின் அவர்கள் மீதமுள்ள நாட்களில் தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
அபூதர் (ரலி) அவர்கள் ஃபலாஹ் தவறிவிடும் அளவிற்கு, என்று கூறும் போது அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுபைர் பின் நுஃபைர், ஃபலாஹ் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் சஹர் உணவு என்று பதிலளித்தார்கள்.
(அபூதாவூத்: 1375)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ:
صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنَ الشَّهْرِ حَتَّى بَقِيَ سَبْعٌ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، فَلَمَّا كَانَتِ السَّادِسَةُ لَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا كَانَتِ الْخَامِسَةُ قَامَ بِنَا حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا قِيَامَ هَذِهِ اللَّيْلَةِ، قَالَ: فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، قَالَ: فَلَمَّا كَانَتِ الرَّابِعَةُ لَمْ يَقُمْ، فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ جَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ وَالنَّاسَ، فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قَالَ: قُلْتُ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ، ثُمَّ لَمْ يَقُمْ بِقِيَّةَ الشَّهْرِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1167.
Abu-Dawood-Shamila-1375.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1169.
1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7706 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-21447 , தாரிமீ-1818 , இப்னு மாஜா-1327 , அபூதாவூத்-1375 , திர்மிதீ-806 , முஸ்னத் பஸ்ஸார்-4041 , குப்ரா நஸாயீ-1289 , நஸாயீ-1605 , 1364 , இப்னு குஸைமா-2206 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-2547 , குப்ரா பைஹகீ-, ஷுஅபுல் ஈமான்-3007 , 3008 , 3410 ,
2 . நுஃமான் பின் பஷீர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அஹ்மத்-18402 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: மாலிக்-302 , புகாரி-994 , முஸ்னத் அபீ யஃலா-1802 , அல்முஃஜமுல் கபீர்-12102 ,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாத இரவு தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை கடமையாகி விடும் என்று நிறுத்திக்கொண்டதாக ஹதீஸ் வருகிறது. ஆனால் இந்த செய்தியில் ஜமாஅத் தொழுகை நடத்தியதாகவும் அதுவும் பிறை 27 அன்று தமது மனைவிகளையும், குடும்பத்தினைரையும், மற்ற மக்களையும் ஒன்று திரட்டி, சஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்குத் தொழுகை நடத்தினார்கள். என்று வருகிறது இரண்டும் முரண்படுவது போல தெரிகிறதே விளக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த செய்தியில் எந்த நாட்கள் என்ற குறிப்பு உள்ளது. மேலும் மற்ற செய்திகளை விட கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது என்பதால் இந்த செய்தியின் பிரகாரமே மற்ற செய்திகளுக்கு சில ஹதீஸ் விரிவுரையாளர்கள் விளக்கம் கூறியுள்ளனர். அனைத்து செய்திகளையும் இணைத்து, நபி (ஸல்) அவர்கள் இரவு தொழுகையை ஜமாஅத்தாக நடத்திய நிகழ்வு ஒன்று தான் என்று இப்னு அப்துல் பர் அவர்களும் விளக்கம் கூறியுள்ளார். (அத்தம்ஹீத்-8/113)
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரரே..
ரஹ்மத் டிரஸ்ட் தமிழாக்கத்தின் ஹதீஸ் எண்கள் எந்த அரபி மூலத்தின் அல்லது மென்பொருள் சார்ந்து குறிக்கப்படுகிறது?
வ அலைக்கும் ஸலாம்.
இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் சகோதரரே!.