தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-806

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

806. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. 23 ஆம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 24 ஆம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.

25 ஆம் நாள், பாதி இரவை தாண்டும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பிச் செல்லும் வரை அவருடன் தொழுதால் அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.

26 ஆம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. 27 ஆம் நாள் இரவில் தமது மனைவிகளையும், குடும்பத்தினைரையும், மற்ற மக்களையும் ஒன்று திரட்டி, ஸஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதற்குப் பின் அவர்கள், மீதமுள்ள நாட்களில் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

அபூதர் (ரலி) அவர்கள், “ஃபலாஹ் தவறிவிடும் அளவிற்கு” என்று கூறும் போது அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள், “ஃபலாஹ்” என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள், “ஸஹர்” உணவு என்று பதிலளித்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

ரமளான் மாதத்தில் (கியாமுல் லைல் எனும்) இரவுத் தொழுகையின் ரக்அத் எண்ணிக்கை குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர், வித்ருடன் சேர்த்து 41 ரக்அத்கள் தொழுவிப்பதை விரும்புகின்றனர். இது மதீனாவாசிகளின் கருத்து ஆகும். மேலும், மதீனாவில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது.

பெரும்பாலான அறிஞர்கள் உமர் (ரலி), அலீ (ரலி) ஆகியோரிடமிருந்தும், நபி (ஸல்) அவர்களின் மற்ற தோழர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ள 20 ரக்அத்கள் என்ற கருத்தை ஆதரிக்கின்றனர். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), இப்னுல் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.

ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், “இவ்வாறே நான், என் ஊரான மக்காவில் 20 ரக்அத்கள் தொழுவிக்கப்படுவதைக் கண்டேன்” என்று கூறுகிறார்கள்.

அஹ்மத் (ரஹ்) அவர்கள், “இது குறித்து பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. ஆனால் இதில் எந்த ஒரு கருத்தும் (உறுதியாக) முடிவுசெய்யப்படவில்லை” என்று கூறுகிறார்கள்.

இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், “உபை பின் கஅப் (ரலி) அவர்களிடமிருந்து வரும் அறிவிப்பின்படி 41 ரக்அத்களை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறுகிறார்கள்.

இப்னுல் முபாரக் (ரஹ்), அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோர் ரமளான் மாதத்தில் (மக்கள்) இமாமுடன் சேர்ந்து தொழவேண்டும் என்று சட்டம் கூறுகின்றனர்.

ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், “ஒருவர் குர்ஆன் ஓதத் தெரிந்தவராக இருந்தால், தனியாகத் தொழவேண்டும்” என்று சட்டம் கூறுகிறார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), நுஃமான் பின் பஷீர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

(திர்மிதி: 806)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الفُضَيْلِ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ الوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ:

صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُصَلِّ بِنَا، حَتَّى بَقِيَ سَبْعٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، ثُمَّ لَمْ يَقُمْ بِنَا فِي السَّادِسَةِ، وَقَامَ بِنَا فِي الخَامِسَةِ، حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْنَا لَهُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا هَذِهِ؟ فَقَالَ: «إِنَّهُ مَنْ قَامَ مَعَ الإِمَامِ حَتَّى يَنْصَرِفَ كُتِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، ثُمَّ لَمْ يُصَلِّ بِنَا حَتَّى بَقِيَ ثَلَاثٌ مِنَ الشَّهْرِ، وَصَلَّى بِنَا فِي الثَّالِثَةِ، وَدَعَا أَهْلَهُ وَنِسَاءَهُ، فَقَامَ بِنَا حَتَّى تَخَوَّفْنَا الفَلَاحَ،
قُلْتُ لَهُ: وَمَا الفَلَاحُ، قَالَ: «السُّحُورُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

وَاخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي قِيَامِ رَمَضَانَ، فَرَأَى بَعْضُهُمْ: أَنْ يُصَلِّيَ إِحْدَى وَأَرْبَعِينَ رَكْعَةً مَعَ الوِتْرِ، وَهُوَ قَوْلُ أَهْلِ المَدِينَةِ، وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَهُمْ بِالمَدِينَةِ،

وَأَكْثَرُ أَهْلِ العِلْمِ عَلَى مَا رُوِيَ عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَغَيْرِهِمَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِشْرِينَ رَكْعَةً، وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ، وَابْنِ المُبَارَكِ، وَالشَّافِعِيِّ ” وقَالَ الشَّافِعِيُّ: «وَهَكَذَا أَدْرَكْتُ بِبَلَدِنَا بِمَكَّةَ يُصَلُّونَ عِشْرِينَ رَكْعَةً»

وقَالَ أَحْمَدُ: «رُوِيَ فِي هَذَا أَلْوَانٌ وَلَمْ يُقْضَ فِيهِ بِشَيْءٍ»

وقَالَ إِسْحَاقُ: «بَلْ نَخْتَارُ إِحْدَى وَأَرْبَعِينَ رَكْعَةً عَلَى مَا رُوِيَ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ»

وَاخْتَارَ ابْنُ المُبَارَكِ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ: الصَّلَاةَ مَعَ الإِمَامِ فِي شَهْرِ رَمَضَانَ ” وَاخْتَارَ الشَّافِعِيُّ: أَنْ يُصَلِّيَ الرَّجُلُ وَحْدَهُ إِذَا كَانَ قَارِئًا ”
وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ، وَابْنِ عَبَّاسٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-806.
Tirmidhi-Alamiah-734.
Tirmidhi-JawamiulKalim-733.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . ஹன்னாத் பின் ஸரீ

3 . முஹம்மத் பின் ஃபுளைல்

4 . தாவூத் பின் அபூஹிந்த்

5 . வலீத் பின் அப்துர்ரஹ்மான்

6 . ஜுபைர் பின் நுஃபைர்

7 . அபூதர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42155-முஹம்மது பின் ஃபுளைல் பற்றி சிலர் பலமானவர் என்றும்; சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இவர் ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையில் ஊறிப்போனவர் என்றும்; இவரை ஆதாரமாக சிலர் ஏற்பதில்லை என்றும் இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    கூறியுள்ளார்.
  • இவர் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிமின் அறிவிப்பாளர் ஆவார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/676…)

இந்தச் செய்தியை தாவூத் பின் அபூஹிந்த் அவர்களிடமிருந்து பலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இதில் விமர்சனம் இல்லை.


மேலும் பார்க்க: அபூதாவூத்-1375.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.