தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-12102

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12102)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الرَّازِيُّ، ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، ثنا أَبُو شَيْبَةَ إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12102.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11941.




إسناد شديد الضعف فيه إبراهيم بن عثمان السلمي وهو متروك الحديث

  • இந்த கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை. காரணம், எல்லாவற்றிலும் ராவீ-761-அபூஷைபா என்ற இப்ராஹீம் பின் உஸ்மான் தான் இடம்பெறுகிறார். இவர் மிக பலவீனமானவர்.
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவர் நம்பகமானவர் அல்ல என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
  • இவரைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    கூறுகிறார்.
  • இவர் நிராகரிக்கப்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.
  • பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்படுவதால் இவரை விட்டு விட வேண்டும் என்று நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தவ்லாபி கூறுகின்றனர்.
  • இவர் பலவீனமானவர். இவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இவருடைய ஹதீஸை விட்டு விட்டனர் என்று அபூஹாத்தம் கூறுகிறார்.
  • இவர் மதிக்கப்பட வேண்டியவர் அல்ல என்று இப்ராஹீம் பின் யஃகூப் ஜோஸ்ஜானீ கூறுகிறார். இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யக் கூடாது என்று ஸாலிஹ் ஜஸரா கூறுகிறார்.
  • இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸரா கூறுகிறார்.
  • இவர் பலமானவர் அல்ல என்று அபூ அலீ நைஸாபூரி கூறுகிறார்.
  • ஷுஃபா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்று அல்அஹ்வஸ் கூறுகிறார்.
    நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 1, பக்கம்: 125

وقال الدارقطني : ضعيف
تهذيب التهذيب: (1 / 76)

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-7692 , அல்முஃஜமுல் கபீர்-12102 , அல்முஃஜமுல் அவ்ஸத்-798 , 5440 , ஸுனன் குப்ரா பைஹகீ-4286 ,

2 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-303 .

3 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-4291 .

4 . உபை பின் கஃ-ப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7684 .

5 . அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7688 .

6 . தாவூத் பின் கைஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7689 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1375 , மாலிக்-302 , புகாரி-994 , முஸ்னத் அபீ யஃலா-1802 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.