தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-4041-4042

A- A+


ஹதீஸின் தரம்: Pending

4041. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இருபத்தி நான்காம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.

இருபத்தி ஐந்தாம் நாள் பாதி இரவை தாண்டும் வரை தொழுகை நடத்தினார்கள். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினோம்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதால் அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.

இருபத்தி ஆறாம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி ஏழாம் நாள் இரவில் தமது குடும்பத்தினைரையும், மனைவிகளையும், அழைத்து  வர ஆளனுப்பினார்கள். அவர்கள் ஒன்று திரண்ட பின், சஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்கு எங்களுக்கு இரவுத்தொழுகை நடத்தினார்கள்…

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

அபூதர் (ரலி) அவர்கள் ஃபலாஹ் தவறிவிடும் அளவிற்கு, என்று கூறும் போது அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுபைர் பின் நுஃபைர், ஃபலாஹ் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் சஹர் உணவு என்று பதிலளித்தார்கள்.

(bazzar-4041-4042: 4042)

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: نَا مِهْرَانُ بْنُ أَبِي عُمَرَ، قَالَ: نَا سُفْيَانُ يَعْنِي الثَّوْرِيَّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ
وَحَدَّثَنَاهُ إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ، قَالَ: نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: نَا سُفْيَانُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرَ رَمَضَانَ فَلَمْ يَقُمْ بِنَا حَتَّى بَقِيَ سَبْعَ لَيَالٍ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ أَوْ نَحْوُهُ، ثُمَّ لَمْ يَقُمْ بِنَا لَيْلَةَ الرَّابِعَةِ، وَقَامَ بِنَا لَيْلَةَ الْخَامِسَةِ حَتَّى ذَهَبَ نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا كَانَ مَعَ الْإِمَامِ حَتَّى يَنْفَتِلَ حُسِبَ لَهُ بَقِيَّةُ لَيْلِهِ» ثُمَّ لَمْ يَقُمْ بِنَا لَيْلَةَ السَّادِسَةِ وَقَامَ بِنَا لَيْلَةَ السَّابِعَةِ وَأَرْسَلَ إِلَى أَهْلِهِ وَنِسَائِهِ فَاجْتَمَعْنَ وَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قُلْتُ: وَمَا الْفَلَاحُ، قَالَ: السَّحُورُ

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُهُ يُرْوَى بِهَذَا اللَّفْظِ إِلَّا عَنْ أَبِي ذَرٍّ وَلَا نَعْلَمُ لَهُ طَرِيقًا، عَنْ أَبِي ذَرٍّ غَيْرَ هَذَا الطَّرِيقِ، وَرَوَاهُ عَنْ دَاوُدَ غَيْرُ وَاحِدٍ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4041.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-3443.




إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات وصدوقيين عدا مهران بن أبي عمر العطار وهو مقبول

இதன் மூன்று அறிவிப்பாளர்தொடரில் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் மிஹ்ரான் பின் அபீஉமர் பலமானவர் அல்ல என்பதால் இது தவிர, மற்ற இரண்டு அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-21447 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.