தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-6786

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே தீர்ப்பு வழங்கி மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. நீதியை அறிந்து அதன்படி தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(almujam-alawsat-6786: 6786)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ، نَا أَبِي، عَنْ جَدِّي، نَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي سَعْدُ بْنُ عُبَيْدَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْقُضَاةُ ثَلَاثَةٌ: قَاضِيَانِ فِي النَّارِ وَقَاضٍ فِي الْجَنَّةِ، قَاضٍ تَرَكَ الْحَقَّ وَهُوَ يَعْلَمُ، وَقَاضٍ قَضَى بِغَيْرِ الْحَقِّ وَهُوَ لَا يَعْلَمُ فَأُهْلِكَ بِحُقُوقِ النَّاسِ، فَهَذَانِ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِالْحَقِّ فَهَذَا فِي الْجَنَّةِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ إِلَّا يَحْيَى بْنُ حَمْزَةَ، تَفَرَّدَ بِهِ: مُحَمَّدُ بْنُ بَكَّارٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6786.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6964.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين يحيى بن حمزة الحضرمي وسعد بن عبيدة السلمي ، وباقي رجاله ثقات وصدوقيين عدا محمد بن هارون العاملي وهو مجهول الحال

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஹாரூன் அறியப்படாதவர். மேலும் யஹ்யா பின் ஹம்ஸாவிற்கும், ஸஃது பின் உபைதாவிற்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.