தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3573

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

1 . நீதியை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சொர்க்கத்தில் நுழைவார்.

2 . நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.

3 . உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இப்னு புரைதா அவர்கள், (தனது தந்தையிடமிருந்து) அறிவிக்கும் செய்தி மிகச் சரியானதாகும்.

(அபூதாவூத்: 3573)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

الْقُضَاةُ ثَلَاثَةٌ: وَاحِدٌ فِي الْجَنَّةِ، وَاثْنَانِ فِي النَّارِ، فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ، وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ، فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ

قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا أَصَحُّ شَيْءٍ فِيهِ يَعْنِي حَدِيثَ ابْنِ بُرَيْدَةَ الْقُضَاةُ ثَلَاثَةٌ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3102.
Abu-Dawood-Shamila-3573.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3104.




  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38586-முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித் அஸ்ஸம்தீ, அள்ளப்பீ, அல்பஃக்தாதீ என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் ليس به بأس – லைஸ பிஹீ பஃஸ்-இவரிடம் குறையில்லை என்று கூறியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இவ்வாறு கூறினால் அவர் பலமானவர் என்பதாகும்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரைப் பற்றி தனக்கு அந்தளவு தெரியவில்லை என்றும், இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம் என்றும் கூறியதாக அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். (காரணம் கூறவில்லை)
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று கூறியதாகவும், இவர் பலமானவர்; பலவீனமானவர்களிடமிருந்து அறிவித்துள்ளார் என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை لين الحديث – صدوق ஸதூக்-லய்யுனுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். இதன் பொருள் நம்பகமானவர்; சிறிது பலவீனமானவர் என்பதாகும். (மற்றவர்கள் ஒருவரை லய்யுனுல் ஹதீஸ் என்று கூறினால் அவர் சிறிது பலவீனமானவர் என்பதாகும். இதன் பொருள் அவர் தனித்து அறிவிக்கும் செய்தி ஏற்கப்படாது; அவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் ஏற்கலாம் என்பதாகும். ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் லய்யுனுல் ஹதீஸ் என்பதை வேறு பொருளிலும் கூறியுள்ளார். ஏனெனில் முஸ்லிமில் இடம்பெறும் சில அறிவிப்பாளர்கள் விசயத்தில் கூட இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    லய்யுனுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். 12 வகை தரமுடைய அறிவிப்பாளர்களில் 6 வது வகையினரான மக்பூல் தரத்தில் உள்ளவர்களை குறிப்பிடும் போது இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    இதைக் குறிப்பிட்டுள்ளார். 3 தன்மைகள் இருந்தால் அவர்கள் லய்யுனுல் ஹதீஸ் ஆகும்.

1 . குறைந்த ஹதீஸ்களை அறிவித்திருப்பார்கள்;

2 . இவர்களின் ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்பதற்கு தகுந்த காரணம் இருக்காது;

3 . இவர்களைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருக்க மாட்டார்கள். இவர்கள் தனித்து அறிவித்திருப்பார்கள்.

இதனடிப்படையில் இவர் இந்தச் செய்தியை கஃலப் பின் கலீஃபாவிடமிருந்து தனித்து அறிவிக்கவில்லை என்பதால் இவர் விசயத்தில் விமர்சனம் இல்லை.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/238, அல்காஷிஃப்-4/96, தஹ்தீபுல் கமால்-25/49, தஹ்தீபுத் தஹ்தீப்-3/538, தக்ரீபுத் தஹ்தீப்-1/835)


2 . மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14974-கலஃப் பின் கலீஃபா பின் ஸாஇத் அல்அஷ்ஜஈ என்பவர் இடம்பெறும் 4 செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்துள்ளார்.

(பார்க்க: முஸ்லிம்-42081841435466)


இவர் இறுதிக்காலத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் என்றும், மூளைக் குழம்பிவிட்டார் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் பிறந்த வருடம் பற்றியும், இவர் அம்ர் ஹாரிஸ் (ரலி) என்ற நபித்தோழரைக் கண்டதாக வரும் தகவல் பற்றியும் கருத்துவேறுபாடு உள்ளது. இதனால் இவர் மூளைக் குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து கேட்டவர்கள் யார்?; மூளைக் குழம்பியபின் கேட்டவர்கள் யார்? என்பது பற்றி அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் பரவலாகக் கூறப்படவில்லை.

என்றாலும் வேறு சில ஆதாரங்களை வைத்து இவர் விசயத்தில் எவ்வாறு முடிவு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இவரின் பிறப்பு பற்றிய தகவல்:

இவரின் பிறப்பு ஹிஜ்ரீ 79 அல்லது 91 அல்லது 92 என்றும், இறப்பு ஹிஜ்ரீ 179 லிருந்து 185 க்குள் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது. மேலும் இவர் 100 வயது வரை வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

இவரின் இறப்பு பற்றிய தகவல்:

1 . இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவர் ஹிஜ்ரீ 181 இல் இவருக்கு 90 வயது இருக்கும் போது அல்லது இதுபோன்ற வயது இருக்கும் போது பஃக்தாதில் இறந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் ஹிஜ்ரீ 179 இன் கடைசியில் அல்லது ஹிஜ்ரீ 180 இல் இறந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

3 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் ஹிஜ்ரீ 181 இல் இவருக்கு 101 வயது இருக்கும் போது பஃக்தாதில் இறந்தார்; ஆரம்பத்தில் இவர் கூஃபாவில் இருந்தார். பிறகு வாஸித் நகருக்கு குடிபெயர்ந்தார். பிறகு பஃக்தாதுக்கு குடிபெயர்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

4 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதைப் போன்று இவர் குடிபெயர்ந்த தகவலை குறிப்பிட்டுவிட்டு இவர் ஹிஜ்ரீ 181 இல் இறந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

5 . அஸ்லம் பின் ஸஹ்ல், இவர் 185 இல் இறந்தார் என்று அறிவித்துள்ளார்.

6 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவர் ஹிஜ்ரீ 181 இல் இறந்தார் என்பதே சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: தபகாதுல் குப்ரா-3421, 7/227, தாரீகு வாஸித்-139, ஸியரு அஃலாமின் நுபலா-8/341, தஹ்தீபுத் தஹ்தீப்-1/541)


இவர் நபித்தோழர்களை பார்த்துள்ளாரா? இல்லையா? என்பதில் இரு கருத்து உள்ளது.

1 . இவரே, நான் ஒருதடவை என் தந்தையிடம் இருந்தபோது எங்களை கடந்து ஒருமனிதர் சென்றார். அப்போது இவர் தான் நபித்தோழர் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) என்று கூறப்பட்டது. அப்போது நான் 6 வயது சிறுவனாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

(இந்தத் தகவலை இவரிடமிருந்து முஹம்மது பின் முகாதில், குதைபா பின் ஸயீத், முஹம்மது பின் பக்கார், அப்துர்ரஹ்மான் பின் வாகித் போன்ற பலர் அறிவித்துள்ளனர்.

இந்தத் தகவலை முஹம்மது பின் முகாதில் அவர்களிடமிருந்து புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அறிவித்துள்ளார். இவ்வாறே வேறு சிலரிடமிருந்து அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னுஹிப்பான், இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
கதீப் பஃக்தாதீ போன்ற பலர் அறிவித்துள்ளனர்)

(நூல்கள்: தாரீகுல் கபீர்-3527, 4/28, அல்ஜர்ஹு வத்தஃதீல்-1681, 3/369, அஸ்ஸிகாத்-6/270, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-612, 3/512, தாரீகு பஃக்தாத்-4367, 9/263)

2 . அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள், கூஃபாவில் ஹிஜ்ரீ 85 இல் மரணித்தார் என்று அபூநுஐம் கூறியதாக இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஆகியோர் அறிவித்துள்ளனர்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-6/305, மவ்ஸூஅது அக்வாலில் இமாம் அஹ்மத்-1987)

இதனடிப்படையிலும், இவர் 100 அல்லது 101 வயது வரை வாழ்ந்தார் என்ற தகவலின்படியும், கலஃப் பின் கலீஃபா, நான் 6 வயதில் இருக்கும்போது அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களை கண்டதாக கூறியுள்ள செய்தியின் அடிப்படையிலும் குறைந்தபட்சம் இவர் ஹிஜ்ரீ 79 இல் பிறந்தார் என்று முடிவு செய்யலாம்.


இவர் நபித்தோழரை பார்க்கவில்லை என்று கூறக்கூடியவர்கள் இவர் ஹிஜ்ரீ 91 அல்லது அதற்கு பிறகு பிறந்தார் என்று கூறுகின்றனர்.

இதற்கான காரணங்கள்:

1 . இப்னு உயைனா அவர்களிடம், இவர் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்களை பார்த்ததாக கூறுகின்றார் என்று கூறப்பட்டபோது, அவர் பொய் கூறுகிறார். அவர்  அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்களை பார்த்திருக்க மாட்டார்; அவரின் மகனான ஜஃபர் பின் அம்ர் பின் ஹுரைஸ் அவர்களைப் பார்த்திருப்பார் எனக் கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அறிவித்துள்ளார்.

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களிடம், இதைப் பற்றி கேட்கப்பட்டபோது ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
இப்னு உயைனா, ஹஜ்ஜாஜ் ஆகியோர் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்களை பார்க்கவில்லை; கலஃப் பின் கலீஃபா மட்டும் பார்த்தாரா? என்று பதில் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-2/341, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/512, தஹ்தீபுல் கமால்-8/284, தஹ்தீபுத் தஹ்தீப்-1/547, 3/153)

3 . நான் 8 வயதில் இருக்கும் போதும், என் சகோதரர் 6 வயதில் இருக்கும்போதும் உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்கள் எங்களுக்கு பொதுநிதியிலிருந்து ஒரு தொகையை வழங்குமாறு கட்டளையிட்டார்கள் என்று கலஃப் பின் கலீஃபா கூறியதாக ஸகரிய்யா பின் யஹ்யா அறிவித்துள்ளார்.

(நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-‌‌6038, 3/477)

இதனடிப்படையில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், உமர் பின் அப்துல்அஸீஸ் ஆட்சிக்கு வந்தது ஹிஜ்ரீ 99 ஆகும். கலஃப் இறந்தது ஹிஜ்ரீ 181 ஆகும். (இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்களின் கருத்தின்படி) இவர் 90 வயது வரை வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. எனவே இவர் ஹிஜ்ரீ 91 அல்லது 92 இல் பிறந்திருப்பார் என்று குறிப்பிட்டுவிட்டு எனவே இவர் அம்ர் பின் ஹுரைஸ் அவர்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

(தஹ்தீபுத் தஹ்தீப்-3/152)

மேற்கண்ட செய்திகளுக்கு பதில்:

1 . கலஃப் பின் கலீஃபாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் முகாதில், குதைபா பின் ஸயீத் ஆகியோர் ஸகரிய்யாவை விட பலமானவர்கள் என்பதால் அவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2 . ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
இப்னு உயைனா, ஹஜ்ஜாஜ் ஆகியோர் ஹிஜ்ரீ 85 க்கு பிறகே பிறந்துள்ளனர்.

3 . இப்னு உயைனா அவர்கள், இவர் நபித்தோழரை பார்த்திருக்கமாட்டார் என்பதற்கு தகுந்த காரணத்தைக் கூறவில்லை. ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், இப்னு உயைனா அவர்களின் கருத்தை மறுத்துள்ளார்.

4 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், இவர் நபித்தோழரை பார்த்துள்ளார். என்றாலும் அவரிடமிருந்து ஹதீஸ் எதையும் மனனமிடவில்லை என்பதால் இவரை தாபிஈன்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

5 . இப்னுல் கய்யால் அவர்கள், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமின் தகவல் படியே இவர் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்களைக் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். இப்னுஉயைனா, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஆகியோர் மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அஸ்ஸிகாத்-6/270, அல்கவாகிபுன் நய்யிராத்-1/155)


இவரின் தரம் பற்றி அறிஞர்களின் தகவல்கள்:

1 . இப்னு ஸஃத்

இவர் பலமானவராக இருந்தார். இவர் மரணமடைவதற்கு முன்பு இவருக்கு பக்கவாதம் நோய் ஏற்பட்டது. அதனால் இவர் உடல் பலவீனமடைந்தார்; மூளைக் குழம்பிவிட்டார்.

2 . இப்னு மயீன்

இவரிடம் குறையில்லை-இவர் ஸதூக்-நம்பகமானவர் ஆவார். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவ்வாறு பலமானவர்களுக்கும் கூறுவார்)

4 . உஸ்மான் பின் அபூஷைபா

இவர் நம்பகமானவர்; பலமானவர் என்றாலும் வயதான காலத்தில் இவரின் நினைவாற்றல் மாறிவிட்டது.

5 . அஹ்மத்

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், இவரை நான் ஹிஜ்ரீ 177 இல் அவரைப் பார்க்க சென்றேன். அப்போது அவர் பக்கவாத நோயில் இருந்தார். அவரிடம் ஒருவர் ஒரு ஹதீஸை கூறி விளக்கம் கேட்டபோது அவர் மெதுவாக கூறினார். எனக்கு அது புரியவில்லை. எனவே நான் திரும்பிவந்துவிட்டேன் என்றும், எனவே இவரிடமிருந்து ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டு எழுதிக்கொண்டவர்கள் அறிவிப்பது சரியானது என்றும் கூறியுள்ளார்.

(சில அறிவிப்பில் ஹிஜ்ரீ 187 இல் பார்த்ததாக வந்துள்ளது. அது தவறாகும்)

ஏனெனில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் ஹிஜ்ரீ 177 இன் கடைசியில் அல்லது ஹிஜ்ரீ 180 இல் மரணமடைந்தார் என்று கூறியதாக அஸ்ரம் அறிவித்துள்ளார்.

6 . முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அம்மார்

இவரிடம் குறையில்லை; என்றாலும் இவர் ஹதீஸ்துறையில் அதிகம் ஈடுபடவில்லை.

7 . இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம்

பலமானவர்.

8 . அபூஹாதிம்

இவரிடம் குறையில்லை.

9 . நஸாயீ

இவரிடம் குறையில்லை.

10 . மஸ்லமா பின் காஸிம்

இவரிடமிருந்து ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டு எழுதிக்கொண்டவர்கள் அறிவிப்பது சரியானது.

11 . இப்னு ஹிப்பான்

இவர் நபித்தோழர் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்களை பார்த்துள்ளார். என்றாலும் அவரிடமிருந்து எதையும் மனனமிடவில்லை என்பதால் இவர் தாபிஈ அல்ல.

12 . இப்னு அதீ

இவரிடம் குறையில்லை-சில அறிவிப்புகளில் தவறு செய்துள்ளார். இவர் 7 வயதில் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்களை பார்த்தார்.

13 . இப்னு ஷாஹீன்

பலமானவர்.

14 . தஹபீ

ஸதூக்-நம்பகமானவர்.

15 . இப்னு ஹஜர்.

ஸதூக்-நம்பகமானவர்; இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/369, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/512, அஸ்ஸிகாத்-6/269, தஹ்தீபுல் கமால்-8/284, அல்காஷிஃப்-2/362, அல்இக்மால்-4/201, தஹ்தீபுத் தஹ்தீப்-1/547, தக்ரீபுத் தஹ்தீப்-1/299, அல்கவாகிபுன் நய்யிராத்-1/155)



மேற்கண்ட தகவல்களிலிருந்து இவரை சிலர் பலமானவர் என்றும் சிலர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் கூறியுள்ளனர் என்பதையும், இவர் இறுதிக்காலத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் என்றும், மூளைக் குழம்பிவிட்டார் என்றும் தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே இவர் மூளைக் குழம்புவதற்கு முன் இவரிடம் கேட்டவர்கள் அறிவிக்கும் செய்திகள் சரியானவையாகும். இவர் மூளைக் குழம்பிய பின் இவரிடம் கேட்டவர்கள் அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவையாகும்.

ஆனால் இவர் மூளைக் குழம்புவதற்கு முன் இவரிடம் கேட்டவர்கள் யார் இவர் மூளைக் குழம்பிய பின் இவரிடம் கேட்டவர்கள் யார் என்று அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் தெளிவாகக் கூறப்படவில்லை.

இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தவர்களை 4 வகையாக பிரிக்கலாம்.

1 . ஆரம்பத்தில் கேட்டவர்கள்:

  • 1 . ஹுஷைம் பின் பஷீர்-இறப்பு ஹிஜ்ரீ 183
  • 2 . வகீஃ பின் ஜர்ராஹ்-இறப்பு ஹிஜ்ரீ 196

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் ஆசிரியர்கள்.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் ஹிஜ்ரீ 164 இல் பிறந்தவர். ஹிஜ்ரீ 177 இல் இவருக்கு 13 வயது இருக்கும்போது கலஃப் அவர்களை பலவீனமான நிலையில் பார்த்துள்ளார். ஆனால் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் ஆசிரியர்களில் சிலர் கலஃப் பின் கலீஃபாவிடம் ஹதீஸைக் கேட்டுள்ளனர். அவர்கள்:

  • 3 . அஃப்பான் பின் முஸ்லிம்
  • 4 . ஹுஸைன் பின் முஹம்மத்

3 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்துள்ள இவரின் செய்திகளில் இடம்பெறும் இவரின் மாணவர்கள்.

புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் இறுதிக் காலத்தில் மூளைக்குழம்பியர்கள் இடம்பெறும் சில செய்திகளை அறிவித்துள்ளனர். அந்த செய்திகள் எல்லாம் அவர்கள் மூளைக் குழம்புவதற்கு முன் அறிவித்த செய்திகளாகும். இதனடிப்படையில் முஸ்லிமில் இடம்பெறும் கலஃப் அவர்களின் மாணவர்கள்:

  • 5 . குதைபா பின் ஸயீத்
  • 6 . இப்னு அபூஷைபா
  • 7 . முஹ்ரிஸ் பின் அவ்ன்
  • 8 . யஹ்யா பின் அய்யூப்

4 . சில அறிவிப்பாளர்களின் பிறப்பு, இறப்பைக் கவனித்து பார்க்கும் போது இவர்கள் கலஃப் பின் கலீஃபாவிடம் ஆரம்பத்தில் கேட்டவர்கள் என்று புரிந்துக் கொள்ளலாம்.

இவர்களைப் பற்றிய விவரம்:

  • 9 . ஸயீத் பின் ஸுலைமான் பின் கினானா அள்ளப்பீ.

இவரின் பிறப்பு ஹிஜ்ரீ 115, அல்லது 120 ஆகும். இறப்பு 225. இவரும் 100 அல்லது 95 வயது வரை வாழ்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. இவர் வாஸித் நகரைச் சேர்ந்தவர். பிறகு பஃக்தாதுக்கு குடிபெயர்ந்தார்.

இவர் மேற்கண்ட செய்தியை கலஃப் பின் கலீஃபாவிடமிருந்து அறிவித்துள்ளார். (பார்க்க: குப்ராநஸாயீ-5891)

  • 10 . ஸயீத் பின் மன்ஸூர்…
  • 11 to 21

மீதமுள்ள 11 பேரைப் பற்றிய தகவல் ஆய்வில்…


இந்த செய்தியை இவரிடம் ஆரம்பத்தில் கேட்டவர்களும் அறிவித்துள்ளனர் என்பதாலும், இவர் தனித்து அறிவிக்கவில்லை என்பதாலும் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ள செய்தியாகும்.


1 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கலஃப் பின் கலீஃபா —> அபூஹாஷிம் —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: இப்னுமாஜா-2315 , அபூதாவூத்-3573 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ராநஸாயீ-5891 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-3616 , குப்ராபைஹகீ-20354 ,

  • ஷரீக் பின் அப்துல்லாஹ் —> அஃமஷ் —> ஸஃத் பின் உபைதா —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: திர்மிதீ-1322 , முஸ்னத் பஸ்ஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-1154 , ஹாகிம்-7013 , குப்ராபைஹகீ-20355 , 20356 , ஷுஅபுல்ஈமான்-7125 ,

  • கைஸ் பின் ரபீஃ —> அஃமஷ் —> ஸஃத் பின் உபைதா —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4468 ,

  • கைஸ் பின் ரபீஃ —> அல்கமா பின் மர்ஸத் —> ஸுலைமான் பின் புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1156 ,

  • யஹ்யா பின் ஹம்ஸா —> ஸஃத் பின் உபைதா —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6786 ,

  • ஹகம் பின் உதைபா, யூனுஸ் பின் கப்பாப் —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6757 ,

  • அப்துல்லாஹ் பின் புகைர் —> ஹகீம் பின் ஜுபைர் —>அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: ஹாகிம்-7012 ,


2 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21599 .

3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13801 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-475 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.