தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-475

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யஸீத் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை)ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இருவருக்கும் கூட தீர்ப்பளிக்கும் பொறுப்பை ஏற்கமாட்டேன். இருவருக்கும் கூட இமாமாக ஆகமாட்டேன். “யார் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டாரோ அவர் சிறந்த புகழிடத்தை பெற்றுக்கொண்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூற நீங்கள் கேட்டுள்ளீர்கள் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ஆம், கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

இப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் என்னை நீதிபதி பதவிக்கு நியமிப்பதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறினார்கள்.

உடனே உஸ்மான் (ரலி) அவர்கள், காரணத்தை ஏற்று அவரை நியமிக்கவில்லை. மேலும், இந்த செய்தியை வேறு யாரிடமும் சொல்லாதீர்கள் என்றும் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 475)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا أَبُو سِنَانٍ، عَنْ يَزِيدَ بْنِ مَوْهَبٍ،

أَنَّ عُثْمَانَ، قَالَ لِابْنِ عُمَرَ: اقْضِ بَيْنَ النَّاسِ، فَقَالَ: لَا أَقْضِي بَيْنَ اثْنَيْنِ وَلا أَؤُمُّ رَجُلَيْنِ، أَمَا سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَاذَ بِاللَّهِ فَقَدْ عَاذَ بِمَعَاذٍ» قَالَ عُثْمَانُ: بَلَى، قَالَ: فَإِنِّي أَعُوذُ بِاللَّهِ أَنْ تَسْتَعْمِلَنِي فَأَعْفَاهُ، وَقَالَ: لَا تُخْبِرْ بِهَذَا أَحَدًا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-475.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-462.




إسناد ضعيف فيه عيسى بن سنان القسملي وهو ضعيف الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ ஸினான் என்ற ஈஸா பின் ஸினான் பலவீனமானவர். யஸீத் பின் அப்துல்லாஹ் பின் மவ்ஹப் அறியப்படாதவர்.

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

அபூஸினான்

பார்க்க: அஹ்மத்-475 , மதாலிபுல் ஆலியா-2239 .

முஃதமிர் பின் ஸுலைமான்

பார்க்க: திர்மிதீ-1322/1 , முஸ்னத் அபீ யஃலா-5727 , இப்னு ஹிப்பான்-5056 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2729 , அல்முஃஜமுல் கபீர்-13319 ,

அல்முஃஜமுல் அவ்ஸத்- 3828 ,


இந்த கருத்தில் வரும் அனைத்து வெவ்வாறான அறிவிப்பாளர் தொடர்களும் (குறை நிவர்த்தியாகும் வகையிலான) பலவீனமான செய்திகளாக உள்ளன. எனவே ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள், ஹதீஸ்கலை விதிப்படி இதை ஹஸன் லிகைரிஹீ என்று குறிப்பிட்டுள்ளார்…


இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3573 ,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.