தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Sharh-Maanil-Aasaar-2898

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூதல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.

அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

(sharh-maanil-aasaar-2898: 2898)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِيهِ،

«أَنَّ أَبَا طَلْحَةَ، دَعَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ , حِينَ تُوُفِّيَ فَأَتَاهُمْ فَصَلَّى عَلَيْهِ , فَتَقَدَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ , وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ لَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ

وَإِنَّمَا كَانَ تَزَوُّجُ أَبِي طَلْحَةَ وَأُمِّ سُلَيْمٍ بَعْدَ قُدُومِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ بِمُدَّةٍ , وَعُمَيْرٌ وَلَدُهُ مِنْهَا فِي ذَلِكَ النِّكَاحِ , تُوُفِّيَ وَهُوَ طِفْلٌ» فَهَذَا أَخُوهُ عَبْدُ اللهِ بْنُ أَبِي طَلْحَةَ يَذْكُرُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَيْهِ


Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-2898.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-1855.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹர்மலா பின் யஹ்யா பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் சிலர் இவரின் ஹதீஸ்கள் எழுதப்படும் ஆனால் தனித்து அறிவித்தால் ஆதாரமாக எடுக்ககூடாது என்று கூறியுள்ளனர். இவர் இப்னு வஹ்பின் ஹதீஸ்களை நன்கு அறிந்தவர் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

وفي «الأعلام» لابن خلفون : حرملة هذا اختلف في عدالته : فوثقه قوم ، وجرحه آخرون ، ولم يكن بمصر أعلم منه بابن وهب
إكمال تهذيب الكمال: (4 / 34)

 

சரியான ஹதீஸ் பார்க்க : ஹாகிம்-1350 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.