தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1350

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூதல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.

அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

(ஹாகிம்: 1350)

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثنا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ بْنِ مُهَاجِرٍ، ثنا أَبُو الطَّاهِرِ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ، قَالَا: ثنا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِيهِ،

أَنَّ أَبَا طَلْحَةَ «دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ، وَلَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَسُنَّةٌ غَرِيبَةٌ فِي إِبَاحَةِ صَلَاةِ النِّسَاءِ عَلَى الْجَنَائِزِ، وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-1350.
Hakim-Shamila-1350.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1283.




  • அபூதல்ஹா (ஸைத் பின் ஸஹ்ல்) அவர்கள் நபித்தோழர் ஆவார். அவரின் மகன் அப்துல்லாஹ் பின் ஸைத், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சிறுகுழந்தை, அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பேரித்தம்பழம் ஊட்டிவிட்டு அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள். பார்க்க : புகாரி-5470 .
  • ஆனால் விவரம் தெரிந்து இவர் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதால் இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் தாபியீன்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். மேற்கண்ட செய்தியை தன் தந்தை வழியே அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-1350 , அல்முஃஜமுல் கபீர்-4727 , மஆனில்ஆஸார்-2898 , குப்ரா பைஹகீ-6908 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.