தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3170

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 ஒப்பந்தத்தை முறித்தவர்களுக்கு எதிராகத் தலைவர் பிரார்த்திப்பது.

 ஆஸிம்(ரஹ்) அறிவித்தார்.

நான் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘குனூத்’ ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)’ என்று கூறினார்கள். ‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)’ என்று நீங்கள் கூறியதாக இன்னார் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அவர் பொய் சொன்னார்’ என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களைக் குறித்து, ‘அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் சில கிளையினருக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்’ என்று அறிவித்தார்கள்.

அப்போது அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைக்கும் மக்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள்… என்று (அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்…

அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். பனூ சுலைம் குலத்தாருக்கு நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. எனவே, அவர்களின் மீது கோபமடைந்ததைப் போல் வேறெவர் மீதும் நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்து நான் பார்த்ததில்லை.
Book : 58

(புகாரி: 3170)

بَابُ دُعَاءِ الإِمَامِ عَلَى مَنْ نَكَثَ عَهْدًا

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ

سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ القُنُوتِ، قَالَ: قَبْلَ الرُّكُوعِ، فَقُلْتُ: إِنَّ فُلاَنًا يَزْعُمُ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ؟ فَقَالَ: كَذَبَ، ثُمَّ حَدَّثَنَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ، يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ»، قَالَ: «بَعَثَ أَرْبَعِينَ – أَوْ سَبْعِينَ يَشُكُّ فِيهِ – مِنَ القُرَّاءِ إِلَى أُنَاسٍ مِنَ المُشْرِكِينَ»، فَعَرَضَ لَهُمْ هَؤُلاَءِ فَقَتَلُوهُمْ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ، «فَمَا رَأَيْتُهُ وَجَدَ عَلَى أَحَدٍ مَا وَجَدَ عَلَيْهِمْ»





மேலும் பார்க்க: புகாரி-1001 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.